ண்ணோவ் உதய்ண்ணா தம்பி நானு.. உற்சாகமாக பேசிய திமுகவின் "Gen Z” இளைஞர் மீது தாக்குதல்! பரபர வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் "Gen Z DMK" நிகழ்ச்சியில் "உதயண்ணா தம்பி டா நானு" என முழக்கமிட்ட இளைஞர் ஒருவர் சென்னை சைதாப்பேட்டையில் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தாக்கப்பட்ட இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

அண்மையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட "Gen Z DMK" நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அப்போது, சமூக வலைதளங்களில் பிரபலமாகி வரும் ஒரு இளைஞர் "உதயண்ணா தம்பி டா நானு" என உற்சாகமாக முழக்கமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

Gen Z DMK tvk

இந்த நிலையில், அந்த வீடியோவில் இடம்பெற்ற இளைஞர் மீது சைதாப்பேட்டை பகுதியில் சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்ததாக கூறப்படும் இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட இளைஞர் காவல்துறையிடம் அளித்ததாக கூறப்படும் புகாரில், "உதயண்ணா தம்பி" என்று முழக்கமிட்டதற்காக சிலர் தன்னை வழிமறித்து தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலின் போது ஆயுதம் கொண்டு வருமாறு சிலர் மிரட்டியதாகவும் அவர் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், திமுக ஆதரவாளர்கள் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி சார்ந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் இந்த விவகாரம் குறித்து பதிவுகள் வெளியாகியுள்ளன.

மறுபுறம், சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக காவல்துறை இன்னும் முழுமையான தகவலை வெளியிடவில்லை. தாக்குதல் நடந்ததாக கூறப்படும் சூழ்நிலை, அதில் தொடர்புடையவர்கள் யார், அரசியல் பின்னணி ஏதேனும் உள்ளதா என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையேயான சமூக வலைதள மோதல்கள் நேரடி மோதல்களாக மாறக்கூடாது என்றும், சம்பவம் தொடர்பாக உண்மை நிலை முழுமையாக வெளிவர வேண்டும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சைதாப்பேட்டை காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவத்தின் உண்மை நிலை விசாரணைக்கு பிறகே தெளிவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்த இளைஞர் பயத்துடன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+