முதல்வர் விஜய் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்காத தோழி திரிஷா.. காரணம் இதுதானா? பின்னணி சம்பவம்
சென்னை: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக கவனத்தை பெற்றிருக்கிறது. பல ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களின் கொண்டாட்டங்களை பார்த்த விஜய், இப்போது தமிழக முதல்வராக முதல் முறையாக பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இருப்பதால், அரசியல் வட்டாரத்திலிருந்தும் திரையுலகத்திலிருந்தும் சமூக வலைதளங்களிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட கேள்வி ஒன்று மட்டும் இன்னும் பதில் இல்லாமல் சுற்றிக்கொண்டே இருக்கிறது, "விஜயின் தோழி திரிஷா இந்த முறை விஜய்க்கு வாழ்த்து சொல்லவில்லையா?" என்பதுதான்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
விஜய் பிறந்தநாள் வந்தாலே ரசிகர்கள் காத்திருக்கும் விஷயங்களில் ஒன்று, அவருடன் நெருக்கமாக பணியாற்றிய நட்சத்திரங்கள் யார் யார் வாழ்த்து தெரிவிக்கிறார்கள் என்பதுதான். அதிலும் குறிப்பாக திரிஷாவின் பெயர் வந்துவிட்டால், அது சாதாரண ரசிகர் ஆர்வமாக மட்டும் இருக்காது; நேராக சமூக வலைதள விவாதமாக மாறிவிடும். காரணம், விஜய்-திரிஷா கூட்டணி திரையில் எப்போதும் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

திரிஷா விஜய் கூட்டணி
கில்லி, திருப்பாச்சி, குருவி, லியோ என பல கட்டங்களில் இந்த ஜோடி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதோடு, கடந்த சில ஆண்டுகளாக இவர்களை பற்றிய கிசுகிசுக்களும், சமூக வலைதள யூகங்களும் இடைவிடாமல் பரவி வந்ததே தனி காரணம்.
அதனால்தான் இந்த ஆண்டு விஜயின் பிறந்தநாளில் திரிஷா என்ன போஸ்ட் போடுவார், பழையபடி ஒரு புகைப்படமா, ஒரு குறும்பான caption-ஆ, இல்ல ஒரு சாதாரண "Happy Birthday" பதிவா என்று ரசிகர்கள் காலை முதலே கண்காணித்து வந்தனர். ஆனால் நாள் முழுக்க விஜய்க்கு பலர் வாழ்த்து தெரிவித்து கொண்டிருந்த போதும், திரிஷா தரப்பில் இருந்து எந்தப் பதிவும் வெளியாகாதது ரசிகர்களை இன்னும் அதிகமாக பேச வைத்திருக்கிறது.
வாழ்த்து போஸ்ட் இல்லை
இதிலிருந்தே சமூக வலைதளங்களில் இரண்டு வகையான பேச்சுகள் கிளம்பியுள்ளன. ஒரு தரப்பு, "ஒவ்வொரு வருடமும் இவருடைய வாழ்த்து பதிவே தனி செய்தியாக மாறிவிடுகிறது; அதனால் தேவையற்ற கவனத்தைத் தவிர்க்கவே இந்த முறை திரிஷா அமைதியாக இருக்க முடிவு செய்திருக்கலாம்" என்று கூறுகிறது.
இன்னொரு தரப்பு, "ஏற்கனவே விஜய்-திரிஷா குறித்து எதையும் விடாமல் பேசும் சூழல் இருக்கிறது. அப்படியிருக்க, ஒரு சாதாரண பிறந்தநாள் வாழ்த்தே மீண்டும் பெரிய விவாதமாக மாறிவிடும் என்பதால் தான் திரிஷா போஸ்ட் போடாமல் இருந்திருக்கலாம்" என யூகிக்கிறது.

பின்னணி காரணம்
இந்த முறை அந்த அமைதிக்கு இன்னொரு காரணத்தையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். சமீப காலமாக விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், குடும்பத்தை பற்றியும், திரிஷாவை இணைத்தும் பலவிதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் எதுவும் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படாதவை என்றாலும், அந்த விவாதங்கள் ரசிகர் வட்டாரத்தை கடந்து பொது பேசுபொருளாக மாறிவிட்டன.
அதனால், "இப்போது எந்த பதிவு போட்டாலும் அது வாழ்த்தாக பார்க்கப்படாது; வேறு கோணத்தில் தான் படிக்கப்படும்" என்ற புரிதலில்தான் திரிஷா இந்த முறை பின்வாங்கியிருக்கலாம் என சிலர் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், சில ரசிகர்கள் வேறு கோணத்தையும் முன்வைக்கிறார்கள். "திரிஷா வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பதற்காக அதை பெரிய பிரச்சனையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு வருடமும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சமூக வலைதளத்தில் போஸ்ட் போடாததால் உறவு மாறிவிட்டது என்று அர்த்தம் இல்லை" என்றும் அவர்கள் கூறுகிறார்கள். ஆனாலும், விஜயின் பிறந்தநாள் என்றாலே திரிஷா பெயர் ட்ரெண்டில் வருவது போல, இந்த முறை "வாழ்த்து இல்லாததே" ட்ரெண்டாகி இருப்பது தான் கவனிக்கத்தக்க விஷயம்.
மொத்தத்தில், இந்த ஆண்டின் விஜய் பிறந்தநாளில் ரசிகர்கள் எதிர்பார்த்த பெரிய அப்டேட் ஜன நாயகன் பற்றியதா, அரசியல் அறிவிப்பா என்பது ஒருபக்கம் இருந்தாலும், சோசியல் மீடியாவில் அமைதியாகவே பெரிதாகி நிற்கும் கேள்வி இதுதான் - "விஜய்க்கு திரிஷா ஏன் வாழ்த்து சொல்லவில்லை?" என்பதுதான்.














Click it and Unblock the Notifications