குக் வித் கோமாளி புகழ் கேஷூவலாக அஜித் குமார் பற்றி சொன்னதுமே.. கிளம்பி வந்த விஜய் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி புகழ் அஜித்தைக் குறித்து கேஷூவலாக ஷேர் செய்திருந்த கருத்து, இப்போது சோஷியல் மீடியாவில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையே ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்தச் சர்ச்சை குறித்து பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, அஜித்தின் அசல் குணத்தையும் அவரது தனித்துவமான நகைச்சுவை உணர்வையும் வெளிப்படையாக புகழ்ந்து பேசியிருக்கிறார்.

விஜய் டிவி புகழ் தன்னுடைய பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பற்றி பேசியிருந்தார்.. "ஒருமுறை, ஐயா காமெடி படம் பண்ணலாமே. நானும் உங்கள்கூட நடிப்பேனே" என கேட்டேன். அதற்கு அவர், "நிறைய படங்கள் செய்திருக்கேனே. என்னுடைய ஓடாத படமெல்லாம் காமெடி படம்தானே புகழ்?" என்றார்..

CWC Pugazh Comment on Ajith kumar

ஒரு உச்சக்கட்ட நடிகர், அவ்வளவு பெரிய ஜென்டில்மேன். அவர் என்னிடம் இப்படி சொல்கிறார். அவர் எப்போதும் நம்மை கம்ஃபோர்ட் ஸோனில் வைத்துக்கொள்வார்" என்று பெருமையாக அஜித் பற்றி பேசியிருந்தார்.

குத் வித் கோமாளி புகழ்

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு MEDIA CIRCLE சேனலில் பேசுபோது, இதுகுறித்து தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.. அதில், விஜய் டிவி புகழ் அளித்த ஒரு நேர்காணலில், நடிகர் அஜித் குறித்துக் குறிப்பிட்ட விஷயம் Sarcastic கலந்ததாக இருந்தாலும், அது இப்போது ஒரு பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. புகழ் அஜித்திடம் சென்று, 'நீங்கள் ஒரு காமெடி படங்களில் நடியுங்கள் சார், எனக்கு அதில் ஒரு வாய்ப்பு கொடுங்கள்' என்று கேட்டுள்ளார்.

அதற்கு அஜித், "நான் நகைச்சுவைத் திரைப்படங்கள் நிறைய நடித்திருக்கிறேனே, உங்களுக்குத் தெரியாதா?' என்று கூற, "'என்ன படம் சார்? என்று புகழ் திரும்பக் கேட்டுள்ளார். உடனே அஜித், "நான் நடித்துத் திரையரங்குகளில் ஓடாத படங்கள் எல்லாமே காமெடி படங்கள் தானே' என்று மிகவும் மகிழ்வோடும் எதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

அஜித் குமார் பற்றி சொன்ன வார்த்தை

அவர் கேஷூவலாக சொன்ன விஷயத்தை இப்போது சோஷியல் மீடியாவில் எப்படி கொண்டு சென்றுவிட்டார்கள் என்றால், "ஒருவேளை விஜய்யிடம் இப்படி ஒரு வார்த்தையைக் கூறி, விஜய் முதலமைச்சர் ஆனதற்கு பிறகு இதையெல்லாம் புகழால் வெளிப்படையாகப் பேச முடியுமா? அந்தத் தைரியம் இருக்குமா?" என்று அஜித் ரசிகர்கள் இப்போது விஜய்யுடன் ஒப்பிட்டுப் பேசிப் பதிவுகளை ஷேர் செய்து வருகிறார்கள்.

சோஷியல் மீடியாவில் எதற்கு எடுத்தாலும் ஒப்பிட்டுப் பேசுவது ஒரு வழக்கமாகவே போய்விட்டது. ஆனால், இந்த ஒப்பீடுகள் அனைத்தும் தேவையற்ற ஒன்றாகும்.

சீரியஸான காமெடி மேட்டர்

அஜித் உண்மையில் மிகச்சிறந்த ஹியூமர் சென்ஸ் உடையவர். அது அவருடன் நெருங்கி பழகும் அனைவருக்கும் நன்றாக தெரியும். அவர் எப்போதுமே மிகவும் மகிழ்ச்சியாகவும், கலகலப்பாகவும் பேசக்கூடிய ஒரு மனிதர். அனைவரிடமும் மிகவும் எதார்த்தமாகப் பழகுவார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் சக ஊழியர்களுக்கு அவரே விருப்பப்பட்டுப் பிரியாணி சமைத்துப் போடுவார். இதெல்லாம் அவருடைய இயல்பான குணம், அதனை நாம் மாற்ற முடியாது. இன்று வரை அஜித் அப்படித்தான் இருக்கிறார்.

இப்போது இருக்கும் சம்பள விவகாரத்தை எடுத்துக்கொண்டால், "நான் கேட்கும் சம்பளத்தைத் தயாரிப்பாளர்கள் கொடுத்தால் நடிக்கிறேன். ஒருவேளை அது கிடைக்கவில்லை என்றாலும் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நான் ரேஸூக்கு செல்வேன், அல்லது என் மனைவி ஷாலினியுடன் மகிழ்ச்சியாக, நிதானமாக குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவேன்" என்று நினைக்கக்கூடிய மனநிலைதான் இப்போது அவரிடம் இருக்கிறது.

ஜாலி டைப் அஜித்

ஏனென்றால் வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேல் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டால், "பார்த்துக் கொள்ளலாம்" என்ற இத்தகைய முதிர்ச்சியான மனநிலை வந்துவிடும். அதுதான் இப்போது அஜித்திடமும் உள்ளது. எனவே, புகழ் சொன்ன இந்த விஷயத்தை ஒரு காமெடியாக மட்டுமே கடந்து போக வேண்டுமே தவிர, அதற்கு மேல் அதனைப் பெரிதுபடுத்தக் கூடாது" என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+