அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய விஜய்; வீட்டுக்கு கூட செல்லாமல் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி
Recommended Video

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அஞ்சலி செலுத்தினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 'சர்கார்' திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், படப்பிடிப்பிற்காக அமெரிக்காவில் இருந்தார். இதனால் கருணாநிதி கடந்த 7ம் தேதி மரணமடைந்து 8ம் தேதி, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, விஜய்யால் அதில் பங்கேற்க முடியவில்லை.

இருப்பினும் விஜயின், மனைவி சங்கீதா, கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விஜய் லாஸ்வேகாஸ் நகரில் இருந்து விமானத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார்.
விமானநிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு கூட செல்லாமல் நேரடியாக மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது விஜய் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லி இருந்தார்.
பத்திரிகையாளர்களை தவிர்ப்பதற்காக மருத்துவமனையின் பின்வாசல் வழியாக அவர் வெளியேறிவிட்டார். அதேபோல் இன்றும் அதிகாலையிலேயே மெரினா நினைவிடத்திற்குச் சென்று தான் பத்திரிகையாளர்கள் அவர் தவிர்த்துவிட்டார்.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு!












Click it and Unblock the Notifications