ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணங்களை துரிதப்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணங்களை துரிதப்படுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார்.
சென்னை: தென் தமிழகத்தையே புரட்டி போட்ட ஓகி புயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தமிழக அரசு நிவாரணங்களை துரிதப்படுத்த வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 30-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியது. அதற்கு ஓகி புயல் என பெயரிடப்பட்டது. தென் தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய இந்த புயல் கன்னியாகுமரியை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.

எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கும் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு மின் சீரமைப்பு பணிகளும் நடைபெறுகிறது.
ஓகி புயல் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தனது டுவிட்டரில் பதிவிடுகையில், ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணங்கள் துரிதப்படுத்த வேண்டும்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு
— Vijayakant (@iVijayakant) December 3, 2017
போற்கால அடிப்படையில் துரிதமாக நிவாரண பணிகளை செயல்படுத்த வேண்டும்.
மக்களுக்கு, அனைவரும் முடிந்த உதவிகளை
செய்ய வேண்டும்.
தேமுதிக சார்பிலும் முடிந்த உதவிகளை செய்வோம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/46EMgeEnD7
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். தேமுதிக சார்பிலும் முடிந்த உதவிகளை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications