கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய போது குழந்தை போல் கதறி அழுத விஜயகாந்த்- வீடியோ
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு அஞ்சலி தெலுத்திய போது சிறு குழந்தை போல் அழுத காட்சி அனைவரையும் வேதனையடைய செய்தது.
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தைராய்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொள்ள கடந்த ஜூன் மாதம் மனைவி பிரேமலதா விஜயகாந்துடன் சென்றார்.
இதனிடையே கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 7-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இதை அறிந்த விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து திரும்பி வர இயலாமல் தவித்தார்.

பேச்சை பாதியில் முடித்த
பின்னர் அங்கிருந்த படியே வீடியோவில் அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதி இறந்ததை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறிய விஜயகாந்த் திடீரென ஒரு கட்டத்தில் குழந்தை போல் அழுதார். மேலும் தனது பேச்சை தொடர முடியாமல் பேச்சை பாதியிலேயே முடித்து கொண்டார்.

சென்னை திரும்பினார்
தாயை இழந்த குழந்தை போல் அவர் அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து இன்று அதிகாலை அவர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார்.

வைரலான வீடியோ
அப்போது நேராக மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் அவர் துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். அவரை சுதீஷ் ஆசுவாசப்படுத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
|
நெருக்கம் காட்டிய விஜயகாந்த்
கருணாநிதியுடன் விஜயகாந்துக்கு நல்ல நட்பு இருந்தது. திரையுலக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவருடன் விஜயகாந்த் நல்ல தொடர்பில் இருந்தார். அவரை தனது பிதாமகனாகவே கருதியிருந்தார் விஜயகாந்த் . எனினும் புதிய கட்சியை தொடங்கியதால் அரசியல் ரீதியாக திமுகவை விமர்சித்திருந்தாரே தவிர தனிப்பட்ட முறையில் கருணாநிதி மீது அவருக்கு நல்ல மரியாதை உண்டு.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications