எங்க அப்பா அம்மா விவசாயிகள்.. இதை விட வேற என்ன வேணும்.. விஜயகாந்த் கேள்வி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: எனது அப்பா, அம்மா விவசாயிகள். நான் முதல்வராக இதை விட வேறு என்ன தகுதி வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.

தஞ்சையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு தனது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பேசினார் விஜயகாந்த். அவரது பேச்சிலிருந்து...
- 6 கட்சிகளை கொண்ட எங்கள் கூட்டணிக்கு என்றும் ஏறுமுகம் தான்.
- முதல்வராக விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
- நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். எனது அப்பா, அம்மா கிராமத்தில் பிறந்தவர்கள்.
- முதல்வராக இதை விட என்ன தகுதி வேண்டும்.
- ஜெயலலிதா, கருணாநிதியிடம் கொள்ளையடிக்க, ஊழல் செய்ய தகுதி இருக்கிறது. அது என்னிடம் இல்லை.
- விஜயகாந்த் செல்லும் இடங்களில் எல்லாம் யாரையாவது அடிக்கிறார் என்று கூறுகிறார்கள்.
- தவறு எங்கு நடந்தாலும் தண்டிக்க தயங்கமாட்டேன். எனக்கு நடிக்க தெரியாது.
- எனக்கு மானசீக குரு எம்.ஜி.ஆர். மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார்.
- அதேபோல் தான் நாங்களும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறோம்.
- நான் யாரிடமும் 5 காசு கூட வாங்காமல் சீட் கொடுத்து இருக்கிறேன்.
- எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் அப்பழுக்கற்றவர்கள்.
- நாட்டை கொள்ளையடித்து கொண்டு இருந்தவர்களை இதுவரை யாரும் தட்டி கேட்கவில்லை.
- தனியார் டி.வி. கருத்து கணிப்பில் தே.மு.தி.க., த.மா.கா., மக்கள் நல கூட்டணிக்கு 130 முதல் 155 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 120 இடங்கள் வந்தாலும் நாம் வெற்றி பெறுவோம்.
- இந்த தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர்.
- இதில் தர்மத்தின் பக்கம் நிற்பவர்கள் நாங்கள். அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அதர்மத்தை சேர்ந்தவர்கள்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications