விஜயகாந்த் மகன் வளர்த்த 5 நாய்கள் அபாரம்.. ஆளுக்கு ஒரு பரிசுடன் திரும்பின!
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் வளர்த்த 5 நாய்கள், சென்னையில் நடந்த நாய்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன. இதில் 5 பரிசுகளையும் வென்று விஜய பிரபாகரனுக்கும், விஜயகாந்த்துக்கும் பெருமை சேர்த்தன.
இந்தப் போட்டியில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் சவ் சவ் நாய்க்கும் ஒரு பரிசு கிடைத்தது.
ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டு வெற்றி பெற்ற நாய்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கெளரவித்தார்.

104வது நாய்கள் சாம்பியன்ஷிப்
சென்னை நாய்கள் கிளப்பின் சார்பில் 103 மற்றும் 104வது சாம்பியன்ஷிப் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. நேற்றுடன் முடிவடைந்தது.

விதம் விதமான லொள் லொள்!
இந்தக் கண்காட்சியில் விதம் விதமான நாய்கள் கலந்து கொண்டன. குட்டியூண்டு நாய் முதல் பிரமாண்ட நாய்கள் வரை வகை வகையாக கண்களைக் கவரும் நாய்களைப் பார்க்க முடிந்தது.

மொத்தம் 52 டைப் நாய்கள்
மொத்தம் 52 வகையான நாய்கள் இந்தக் கண்காட்சியில் கலந்து கொண்டன. அனைத்தையும் பிரித்து 10 விதமான பிரிவுகளில் போடடிகள் நடத்தப்பட்டன.

சென்னையிலிருந்து 300
மொத்தம் 682 நாய்கள் கலந்து கொண்டன. இதில் சென்னை நாய்கள் மட்டும் 300 ஆகும். மேலும் சில வெளிநாட்டு நாய்களும் கூட வந்திருந்தன. இவற்றை விமானத்தில் கூட்டி வந்திருந்தனர்.

ஒவ்வொரு நாளும் பத்து பிரிவுகளில் போட்டி
ஒவ்வொரு நாளும் பத்து பிரிவுகளில் போட்டி நடந்து. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த நாய்க்குப் பரிசு கொடுத்தனர். மேலும் 10 பிரிவுகளில் பெஸ்ட் நாய் ஒன்றையும் தனியாக தேர்ந்தெடுத்தும் பரிசு வழங்கினர்.

விஜயகாந்த் மகன் வளர்த்த 5 நாய்கள்
இந்தப் போட்டியில் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் தனது 5 நாய்களையும் களத்தில் இறக்கியி்ருந்தார். இதில் இறுதிப் போட்டியில் அவரது நான்கு நாய்கள் இடம் பெற்று பரிசைத் தட்டிச் சென்றன. மேலும் 10 நாய்களில் சிறந்த நாய் என்ற பரிசை மிஸ்டர் பிக் என்ற விஜய பிரபாகரன் நாய் கூடுதலாக தட்டி பரிசு எண்ணிக்கையை 5 ஆக கூட்டியது.

சைதை துரைசாமியின் சவ் சவ்
அதேபோல மேயர் சைதை துரைசாமியின் சவ் சவ் நாய்க்கும் பரிசு கிடைத்தது. இது சிங்கத்தின் முகம் போல உள்ள நாயாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications