வெள்ள பாதிப்பு: வீட்டு உபயோக பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை ரத்து செய்க- விஜயகாந்த்
சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள மதிப்புக்கூட்டுவரியை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் வட மாவட்டம், தென் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீடுகளிலிருந்த இருசக்கர மோட்டார் வாகனம், சைக்கிள், ‘வாஷிங் மிஷின்', பிரிட்ஜ், டி.வி, கிரைண்டர், மிக்ஸி, பேன், பீரோ, கட்டில், சோபா செட், கியாஸ் அடுப்பு என அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும், அத்தியாவசிய உணவுப்பொருட்களையும் இழந்து நிற்கிறார்கள்.

அதோடு மட்டுமல்ல பல குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. இதுபோன்று பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் இழந்தவற்றை புதிதாக வாங்குவதற்கு, லட்சக்கணக்கில் செலவிட வேண்டும். மீண்டும் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தை வழக்கம் போல் தொடங்க குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறுமாத காலமாகும்.
எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள 14.5 சதவீத மதிப்புக்கூட்டுவரியை (வாட்) ரத்து செய்யவேண்டும்.
அனைத்து உடைமைகளையும் இழந்து மீளாத்துயரில் உள்ள, பாதிக்கப்பட்ட மக்களுக்காக மதிப்புக் கூட்டுவரியை ரத்து செய்வது, அவர்களுக்கு ஒரு வகையில் உதவியாக இருக்கும். எனவே தமிழக அரசு உடனடியாக மதிப்புக்கூட்டு வரியை ரத்து செய்து, உத்தரவிட வேண்டுமென விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications