டெங்கு: அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய தேவையில்லை... ரூ10 லட்சம் நிதி உதவி தேவை: விஜயகாந்த்
டெங்குவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை அரசு வழங்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: டெங்குவால் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை தமிழக அரசு வழங்க முன்வர வேண்டும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்குவை கட்டுப்படுத்த அரசும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
எனினும் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். டெங்குவுக்கு குழந்தைகளும், பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர்.

நோயாளிகளுடன் சந்திப்பு
ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரை விஜயகாந்த் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார். அதுபோல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்திக்க தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சென்றார்.

டெங்கு விவகாரம்
அப்போது நோயாளிகளை விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், டெங்கு விவகாரத்தை பெரிதாக்காமல் மக்களை காப்பாற்ற வேண்டும்.

ரூ.10 லட்சம் நிதியுதவி
டெங்கு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய தேவை இல்லை.
டெங்குவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை குழு
டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், புதுவையில் மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவர்கள் விளக்கினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications