தகிக்கும் தூத்துக்குடி.. மக்கள் போராட்டத்தை ஒடுக்க மேலும் 2,000 போலீஸார் விரைகிறார்கள்!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் அங்கு கூடுதலாக 2000 போலீசார் விரைந்துள்ளனர்.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் அங்கு கூடுதலாக 2000 போலீசார் விரைந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று கடையடைப்பு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணி என அடுத்தடுத்து போராட்டங்களை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கானோரை மடத்தூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆனால் தடையை மீறி போராட்டக்காரர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு வன்முறை ஏற்பட்டது. இந்த பேரணியின்போது போலீஸ் நடத்திய தடியடியில் பொதுமக்களில் ஒருவருக்கு மண்டை உடைந்தது.

ஒருவர் பலி
போராட்டம் கைமீறி போனதால் கட்டுபடுத்த முயன்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து பலியானார்.

ஏராளமானோர் பங்கேற்பு
இதனால் காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த போராட்டக்களத்தில் ஏராளமாக பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

10 கம்பெனி போலீசார்
இந்நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த கூடுதலாக 2000 போலீசார் விரைந்துள்ளனர். எஸ்பிக்கள் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 10 கம்பெனி போலீசார் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.

தென்மண்டல ஐஜி
தென் மாவட்டங்களிலிருந்து போலீஸார் தூத்துக்குடிக்கு விரைகின்றனர்.
தென் மண்டல ஐஜி தூத்துக்குடி சென்றுள்ளார். இதேபோல் மதுரை மண்டல டிஐஜியும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளார்.

பெருமளவில் குவிப்பு
அக்கம் பக்கத்து மாவட்டங்களின் எஸ்பிக்கள் வந்துள்ளனர்.
அதிரடிப்படையினர் உள்ளிட்ட போலீஸார் பெருமளவில் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்குள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்தனை பேரையும் அடித்து விரட்ட முயற்சிப்பார்கள் என கூறப்படுகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications