அப்போலோவிற்கு இன்று படையெடுத்த வி.ஐ.பிக்கள்… கே.ஆர். ராமசாமி, நடிகர் கார்த்திக், தாணு
சென்னை: அப்போலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரிக்க இன்றும் விஜபிக்கள் அப்போலோவிற்கு படை எடுத்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா 22 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சாதாரணமாக காய்ச்சல், நீர்சத்து குறைவு என்று சிகிச்சையளித்து வந்த அப்போலோ மருத்துவமனை நாளடைவில் நுரையீரல் தொற்று இருப்பதாக அறிவித்தது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் ஜெயலலிதா.
இந்நிலையில், ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சியின் தலைவர்கள், பிரமுகர் என பல்வேறு தரப்பினரும் அப்போலோ மருத்துவனைக்கு சென்று அங்குள்ள அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கே.ஆர். ராமசாமி
காங்கிரஸ் சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி அப்போலோ மருத்துவமனைக்கு இன்று சென்றார். பின்னர், முதல்வர் விரைந்து குணமடைந்து பணியை தொடர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். முன்னதாக அப்போலோ மருத்துவரிடம் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

நடிகர் கார்த்திக்
நடிகர் கார்த்திக் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். பின்னர், மருத்துவர்களிடம் அவர் பேசியதாகவும், விரைவில் ஜெயலலிதா குணம் பெற்று வழக்கம் போல் பணிக்கு திரும்புவார் என்றும் தெரிவித்தார். மேலும் அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் வதந்திகளை நம்ம வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

திரைப்படத் தயாரிப்பாளர் தாணு
அப்போலோ மருத்துவமனைக்கு சென்று அதிமுக தலைவர்களை சந்தித்து பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, அனைவரின் வேண்டுதல்படி விரைவில் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இவரைப் போன்றே திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனும் அப்போலோவிற்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து இன்று விசாரித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications