நெல்லையில் அதி வேகமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்.. பீதியில் மக்கள்
நெல்லை: நெல்லை அருகே உள்ள கிராமங்களில் புது விதமான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.
நெல்லை அருகே உள்ளது கீழநத்தம் கிராமம். இ்ங்கு தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் அங்கு முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்துளளனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் முடுக்கி விடப்பட்டு டெங்குவை பரப்பும் கொசுவை கொல்லும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இருந்த போதிலும் சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
கீழநத்தம் கிராமத்தில் குழந்தைகள் உள்பட 6 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர்கள் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்பட பலருக்கு அடுத்தடுத்த காய்ச்சல் ஏற்பட்டது. நெல்லை சித்த மருத்துவ கல்லூரி, மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றோம்.
ஒரு சிலருக்கு காயச்ச்சல் குணமடைந்துள்ளது. இப்பகுதியில் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் சுகாதாரத்தை மேம்படுத்த நடவடிககை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேலும் சுகாதார பணியாளர்கள் அங்கு குவிந்து பணிகளை போர்க்கால வேகத்தில தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications