பெண் எஸ்பியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஐஜி.. விசாரணையை தொடங்குகிறது விசாகா கமிட்டி!
காவல்துறை ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் தெரிவித்தது குறித்து விசாரிக்க காவல்துறையின் விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சென்னை: காவல்துறை ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி பாலியல் புகார் தெரிவித்தது குறித்து விசாரிக்க காவல்துறையின் விசாகா கமிட்டியின் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழக காவல் துறையில், காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றும் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, தனது துறையைச் சேர்ந்த ஐ.ஜி மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது தமிழக காவல்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக தமிழக டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு அந்த பெண் எஸ்பி புகார் கடிதத்தையும் அனுப்பினார். அதில் தான் பணியில் சேர்ந்தது முதலே ஐ.ஜி தன்னிடம் தவறான நோக்கத்திலேயே நடந்து வருவதாக தெரிவித்திருந்தார்.

மிரட்டி கட்டிப்பிடித்தார்
சில சமயங்களில் ஆலோசனை என அழைத்து அவருடைய அறையில் வைத்து தன்னை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் அந்த பெண் எஸ்பி தனது புகாரில் தெரிவித்திருந்தார். பலமுறை தவிர்த்தும் தன்னை மிரட்டி தனக்கு ஐஜி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அவர் கூறியிருந்தார்.

கட்டிப்பிடித்து முத்தம்
வேலை நேரத்தில் தனக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவது, ஆபாச படங்கள் அனுப்புவது என ஐஜியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பெண் எஸ்பி தெரிவித்துள்ளார். கடந்த ஒன்றாம் தேதி அவருடைய அறையில் ஐஜி தன்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார் பெண் எஸ்பி.

நாசமாக்கிவிடுவேன்
இது குறித்து வெளியில் கூறினாலோ அல்லது புகார் அளித்தாலோ ஆண்டுதோறும் வழங்கப்படும் நன்னடத்தை அறிக்கையில் மோசமான வார்த்தைகளை சேர்த்து எதிர்காலத்தை நாசமாக்கிவிடுவேன் என அந்த அதிகாரி மிரட்டியதாகவும் பெண் எஸ்.பி தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

விசாரணை குழு
இந்த புகார் கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து காவல்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் குழு அமைத்து, தமிழக காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

விசாகா கமிட்டி
இந்தக் குழுவில் கூடுதல் டி.ஜி.பி சு.அருணாசலம், டி.ஐ.ஜி தேன்மொழி, டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாக பிரிவில் பணியாற்றும் ரமேஷ், ஓய்வு பெற்ற எஸ்.பி சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் உள்ள மாநில குற்ற ஆவணக் காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பெண் எஸ்.பி-ன் புகார் குறித்து விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications