புரட்சி பண்ண நான் ரெடி.. நீங்க ரெடியா? களத்தில் குதித்த விஷால்
சீமை கருவேல மரத்தை அகற்ற சிதம்பரத்தில் நடிகர் விஷால் களமிறங்கினார்.
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டார் நடிகர் விஷால்.
சிதம்பரத்தில் துப்பறிவாளன் என்ற படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் சென்றுள்ளார். அப்போது, சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் மீதிகுடி கிராமம் அருகே சரஸ்வதி அம்மாள் நகரில் சீமைக் கருவேல மரம் அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். அதைப்பார்த்த விஷாலும் களத்தில் இறங்கினார்.

ஊர் பொது மக்களுடன் சேர்ந்து அந்த கிராமத்து விவசாயிகள் பயன்படுத்தும் நெல் களத்தில் பல வருடங்களாக பராமரிப்பு இல்லாமலும் பாதுகாப்பில்லாமல் முல்புதர்களாக இருந்த சீமக் கருவேல மரங்களை அழிக்கும் பணியில் விஷாலும் ஈடுபட்டார்.

இப்பணியில், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் மணியனும் பங்கேற்றார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய விஷால், கருவேல மரம் அழிப்பதை மாணவர்களால் மட்டும் முடியாது. பொது மக்களும் சேர்ந்து அதை அழிக்க வேண்டும்.
கருவேல மரத்தை வேரோடு பிடுங்க வேண்டும். இந்த நாட்டுக்கு விவசாயிகள் ரொம்பவே முக்கியம். நான் ரெடி... நீங்களும் கருவேல மரத்தை அகற்ற ரெடியா... நான் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் எனவும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது எனவும், கருவேல மரங்கள் அகற்றும் பணியில் பொதுமக்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் எனவும் விஷால் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications