போர்க்களமான அண்ணாசாலை... 3 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது!
தொடர் போராட்டங்களால் போர்க்களமான அண்ணாசாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
Recommended Video

சென்னை : சென்னை ஐபிஎல் போட்டியை எதிர்த்து தொடர்ந்து அண்ணாசாலையில் பிரமாண்டமாக புரட்சி நடைபெற்றதால் போக்குவரத்து 3 மணிநேரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் போராட்டக்காரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து இன்று சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டியை ரத்து செய்யக்கோரி பல அமைப்புகள் கோரிக்கை வைத்தன. ஆனால், போட்டி ரத்து செய்யப்படாது எனவும், சென்னையில் தான் நடக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்தது.

இதனையடுத்து ஐபிஎல் போட்டி நடக்க இருக்கும் சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக பல அமைப்புகள் தெரிவித்தன. நாம் தமிழர் கட்சி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், எஸ்.டி.பி.ஐ கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து போராட்டம் நடத்தினர். இதனால் 3 மணிநேரத்துக்கும் மேலமாக அண்ணாசாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது அப்பகுதிய்8இல் இயல்பு நிலைமை திரும்பியது.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications