அதிமுகவுடன் கூட்டணி.. தெளிவாக இருக்கும் பாஜக.. பொன் ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கியமான விஷயம்
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம் என பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கும்பகோணம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றோம். உலகத்திலேயே கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் கிடையாது. அது போலத் தான் பாஜக-அதிமுகவில் உள்ளக் கருத்து வேறுபாடு என பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாஜக அதிமுக இடையே அண்மைக்காலமாக மோதல் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில், அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதிமுகவினரோ, பாஜகவினரோ இப்போது யாருமே பேசுவது இல்லை. மாறாக கூட்டணி தொடரும் என்றே பேசி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சக்திகேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

பாஜகவில் மாற்றுக்கருத்து
அப்போது அவர் பேசும் போது, " வரும் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக உன்னதமான வெற்றியை பெற உழைக்க வேண்டும். அதற்காகவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. கருத்து வேறுபாடு இல்லாத குடும்பம் இந்த உலகத்துலேயே கிடையாது. அது போலத் தான் பாஜக-அதிமுகவில் சில மாற்றுக்கருத்துக்கள் இருந்தது.

கூட்டணி
அதிமுகவில் பிரிந்துகிடப்பவர்கள் சேர்ப்பதற்கு என்ன முயற்சி செய்கிறார்கள் என்பது எல்லாம் எனக்கு தெரியாது. அது அந்த கட்சியினுடைய விஷயம். கருத்து வேறுபாடு காரணமாக சிலர் ஒரு கட்சியிலிருந்து வெளியேறுவது பல கட்சிகளில் நடந்திருக்கு. நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடும். தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற நாம் உழைக்க உள்ளோம்" என்றார்.

திமுக மீது புகார்
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் சக மாணவர்களைக் கொலை செய்வது, ஆசிரியர்களை மாற்ற வேண்டும் என மாணவர்கள் போராட்டம் செய்வது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்தது இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். திமுக அரசு சரியான முறையில் தன்னுடைய நிர்வாகத்தை செய்யாமல் போனால், தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார்.

45 ஆண்டு அரசியல்
முன்னதாக திருச்சியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.,ராதாகிருஷ்ணன் நேற்று பேசும் போது, "மக்களவைத் தோதலில் பாஜக யாருடன் கூட்டணி வைத்தாலும் திருச்சி மக்களவை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கும் நிலை ஏற்படும் வகையில் கோட்டையாக மாற்றுங்கள். கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் இதற்காக இணைந்து செயலாற்ற வேண்டும். கடந்த 45 ஆண்டு கால அரசியலில் தமிழகத்தில் தற்போது பாஜகவுக்கு குறிப்பிடத் தகுந்த வளா்ச்சி கிடைத்துள்ளது. இதை என்னால் நேரில் உணர முடிகிறது" என்றாா்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications