வழக்கு முடிவு எதிராக வந்தாலும், இடைத்தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயார்: தங்க தமிழ்ச்செல்வன்
வழக்கு முடிவு எதிராக வந்தாலும், இடைத்தேர்தலைச் சந்திக்க 100% நாங்கள் தயார் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : 18 எம் எல் ஏ.,க்கள் வழக்கில் எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், நாங்கள் இடைத்தேர்தலைச் சந்திக்க 100% தயாராக உள்ளோம் என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தமிழகத்தின் ஆட்சி நிலைக்குமா என்று தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம் எல் ஏ.,க்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் குவிந்துள்ளனர். இதுகுறித்து தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசுகையில், தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே வர வேண்டும். உண்மையில் கட்சி கொறடா உத்தரவை மீறியது ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம் எல் ஏ.,க்கள் தான்.
கட்சி தாவல் தடை சட்டம் எங்கள் மீது நிச்சயம் பாயாது. தீர்ப்பு எங்களுக்கு எதிராக வந்தாலும் இடைத்தேர்தலைச் சந்திக்க 100% தயாராக உள்ளோம். தீர்ப்பு சாதகமாக வராவிட்டால், மேல்முறையீடு செய்யமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications