சசிகலா தலைமை ஏற்றால் நாங்கள் தீக்குளிப்போம்.. அதிமுகவினர் கொந்தளிப்பு
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்கு அக்கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றால் நாங்கள் தீக்குளிப்போம் என அக்கட்சி தொண்டர்கள் கூறிவருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடல் நிலை பாதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி இரவு மரணம் அடைந்தார். அவரது மறைவை தொடர்ந்து நிதியமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் அன்று இரவே முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது அதிமுகவை வழிநடத்த எவரும் இல்லை என்றும், அதனால் பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஏற்கவேண்டும் என்று அதிமுக நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று போயஸ் கார்டன் சென்ற அதிமுக நிர்வாகிகள் மதுசூதனன், செங்கோட்டையன் உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே முதல்வர் பன்னீர்செல்வமும் சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் பின்னி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதிமுக தொண்டர்கள் போயஸ் தோட்டத்திலும் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வருகின்றனர். இந்தநிலையில் கட்சிக்காக உழைத்த மூத்த நிர்வாகிகளே கட்சியை வழிநடத்த தகுதியானவர்கள் எனவே அவர்களைத் தான் தலைமை பொறுப்பை ஏற்கவேண்டும் எனவும் சசிகலா தலைமை பொறுப்பை ஏற்றால் நாங்கள் தீக்குளிப்போம் எனவும் தொண்டர்கள் கூறிவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications