மதிமுகவை நாங்கள் புறக்கணிக்கவும் இல்லை. தவிர்க்கவும் இல்லை- திருமாவளவன்
மக்கள் நலக் கூட்டணியில் பிளவு இல்லை, தேவைப்பட்டால் 4 தலைவர்களும் மேடையில் ஒன்றாக தோன்றுவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புதுச்சேரில் வருகிற டிசம்பர் 28ம் தேதி அரசியல் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மதிமுக பங்கேற்காது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தை காக்கவும், ரூபாய் நோட்டுப் பிரச்சினை தொடர்பாக மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுச்சேரியில் வரும் 28ஆம் தேதி அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த அரசியல் பாதுகாப்பு மாநாட்டில் எங்களோடு ஒருமித்த கருத்துடைய ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் பங்கேற்பார்கள். பிரதமர் மோடியின் திட்டத்துக்கு வைகோ ஆதரவு தெரிவித்துள்ளதால் மதிமுக இந்த மாநாட்டில் பங்கேற்காது.
வைகோ உடன் பேசப்பட்டு வெளிப்படையாக எடுக்கப்பட்ட முடிவு. மதிமுக உடன் எவ்வித மனக்கசப்பும் இல்லை. உடன்படும் பிரச்சனைகளில் ஒன்று சேர்ந்து போராடுகிறோம்.
புதிய ரூ.2,000 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் கருப்பு பணம் பதுக்கல் அதிகரித்துள்ளதாக கூறினார். கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மதிமுகவை நாங்கள் புறக்கணிக்கவும் இல்லை, தவிர்க்கவும் இல்லை என்று கூறினார். எங்களுக்குள் எந்த பிளவும் இல்லை, தேவைப்பட்டால் நான்கு பேரும் ஒரே மேடையில் தோன்றுவோம் என்றும் திருமாவளவன் கூறினார்.
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாட்டில் வைகோவிற்கு அழைப்பில்லை என்றும் மக்கள் நலக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications