எத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம்.. அரசுக்கு வலு இருக்கிறது: முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் எத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம் என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: தமிழகத்தில் எத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம் என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதற்கு எதிராக போராடுபவர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் 90 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்து முதல்வர் பேசினார். அதில் சேலம் சாலை போராட்டம், காவிரி ஆணைய கூட்டம், காவிரியில் கர்நாடகாவில் நிலைப்பாடு குறித்து பேசினார்.
அதில், காவிரி தொடர்பாக குறிப்பிட்ட காலத்திற்கு வழக்கு தொடர முடியாது. இப்போதுதான் அதில் இறுதி தீர்ப்பு வந்துள்ளது. இனி காவிரி ஆணையம்தான் இறுதி முடிவுகளை எடுக்கும். தமிழகத்திற்கு காவிரி கிடைப்பதற்கான வழிகளை மத்திய அரசு செய்யும்.
செயல்படாத ஸ்டாலினை செயல் தலைவர் என்று சொல்கிறார்கள். அவர் சரியான எதிர்க்கட்சி தலைவர் போல செயல்படவில்லை. அவர் மக்களுக்கு உழைக்கவேயில்லை. தமிழகத்தில் மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக மட்டும்தான்.
தமிழகத்தில் எத்தனை போராட்டம் நடந்தாலும் முறியடிப்போம்.போராட்டங்களை முறியடிக்கும் வல்லமை அதிமுகவிற்கு உள்ளது. 31,000 போரட்டங்களை அரசு கடந்த ஒரு வருடத்தில் முறியடித்துள்ளது. மக்களை பொய் சொல்லி எதிர்க்கட்சி தூண்டிவிடுகிறது. என்ன போராட்டம் வந்தாலும் அரசு அதை ஒடுக்கும்.
இங்கு அரசுக்கு எதிராக பேசி வருகிறார்கள். எதிர்கட்சியுடன் சிலர் சேர்ந்து கொண்டு அரசை கலைக்க பார்க்கிறார்கள். யார் நினைத்தாலும் அதிமுக அரசை கலைக்க முடியாது.
8 வழி சாலைக்கு எதிராக பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது.இந்த சாலைக்கு எந்த கமிஷனும் வாங்கப்படவில்லை. திமுகதான் சாலை போட்ட போது கமிஷன் வாங்கியது. அதிமுக சதவிகித கமிஷன் வாங்குவதாக கூறுவதும் முழுக்க முழுக்க பொய், என்றுள்ளார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications