போட்டோ போட்டு நியூஸ் வந்துச்சே, கருணாநிதி பார்க்கவே இல்லையா... ராமதாஸ்
சென்னை: புதுச்சேரியில் மது விலக்கை அமல்படுத்த நான் கோரிக்கை வைக்கைவில்லையே என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். புதுச்சேரியிலும் நாங்கள் தான் முதல் முதலாக சாராயக் கடைக்குப் பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினோம். அதுகுறித்து புகைப்படத்துடன் செய்தி வெளியானதே. அதை கருணாநிதி பார்க்கவில்லையா என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
23.02.2012 அன்று புதுவையில் நடந்த கூட்டத்தில் புதுச்சேரியில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்று பேசும் இதே ராமதாஸ், பக்கத்திலே உள்ள புதுவை மாநிலத்திலே மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா? என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி மட்டுமல்ல. நாடு முழுவதும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. பலமுறை இதை நானும், அன்புமணியும் வலியுறுத்தியிருக்கிறோம்.
உதாரணத்துக்கு ஒன்றிரண்டைக் கூற வேண்டுமானால், 20.11.2010 அன்று புதுவை பா.ம.க. தலைமை அலுவலகத் திறப்பு விழாவில் பேசும் போது புதுவையில் பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் கள், சாராயக்கடைகள் மூடப்படும் என அறிவித்தேன்.
தொடர்ந்து 23.07.2011 அன்று புதுச்சேரியில் பா.ம.க.வைச் சேர்ந்த மறைந்த பெண் தமிழறிஞர் மதுரகவியின் வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டு பேசும்போது, புதுவையில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
17.07.2012 அன்று தமிழகத்தில் மட்டுமின்றி புதுவையிலும் மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது மதுக்கடைகளை மூட பூட்டுக்களுடன் வந்த பெண்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட செய்தி படங்களுடன் நாளிதழ்களில் வந்ததை கலைஞர் பார்க்கவில்லையா?
வாக்கில் உண்மை இல்லாத போது நாக்கில் வார்த்தைகள் தடுமாறும் என்பார்கள். அதேபோல் தான் இந்த பிரச்னையில் கலைஞரிடம் உண்மையில்லாததால், தவறான குற்றச்சாற்றுகளைக் கூறி வருகிறார் என்று அவர் கூறியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications