அதிமுக அணிகள் இணைப்பில் பாஜக தலையீடா? மறுக்கிறார் முரளிதரராவ்
அதிமுக அணிகள் ஒன்றாக இணைவதில் எந்தத் தலையீடும் இல்லை என்று வலுவாக மறுப்புத் தெரிவித்துள்ளார் பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்.
சென்னை: அதிமுக அணிகள் இணைவதில் பாஜக எந்த வகையிலும் தலையீடு செய்யவில்லை என்றும், அப்படிக் கூறப்படுவது, முட்டாள் தனமானது என்றும் தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் முரளிதரராவ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் தமிழகம் வருகை தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவரது அலுவல் காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும் அவர் தமிழகம் வருவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். அமித்ஷா வருகையின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு நடைபெறுமா? என்பது குறித்து தெரியவில்லை.
Recommended Video

அதிமுகவை பாஜக இயக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதில் உண்மையில்லை. அது முட்டாள்தனமானது. தமிழகத்தில் மட்டுமல்ல, எந்த ஒரு மாநிலத்திலும், மாநில கட்சிகளின் உள் பிரச்சனையில் பா.ஜ.க தலையிட வேண்டிய அவசியமில்லை.
அதிமுகவின் இரு அணிகள் இணைவது என்பது அவர்களது தொண்டர்களின் விருப்பம். இணைந்தால் வெற்றியே. இல்லையென்றால் அவர்களுக்குள் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் நாங்கள் யாரும் தலையீடு செய்வதில்லை." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications