For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திண்டுக்கல் சீனிவாசன் தலைமை கழகத்துக்குள் வந்தால் தாக்குவோம்.. எம்ஜிஆர் மன்றத்தினர் ஆவேசம்: வீடியோ

எம்ஜிஆர் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கட்சியில் இருந்தும் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என எம்ஜிஆர் மன்ற பொறுப்பாளர்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளன

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: திண்டுக்கல் சீனிவாசனை கட்சியை விட்டு நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என எம்ஜிஆர் மன்ற முன்னாள் தலைவர் ஓம்பொடி பிரசாத் கூறியுள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட மதுரையில் அடிக்கல் நாட்டு நடைபெற்ற போது செய்தியாளர்களிடம் எம்ஜிஆரை மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

 we will attack dindugal srinivasan if he enters in admk head oofice

இந்தக் கருத்து தற்போது சர்ச்சையையும் அமைச்சர் சீனிவாசனுக்கு பலத்தை எதிர்ப்பையும் உருவாக்கி வருகிறது. திண்டுக்கல் சீனிவாசன் தான் அப்படி சொல்லவில்லை என மறுப்பு தெரிவித்தும் எம்ஜிஆர் ரசிகர்களும் எம்ஜிஆர் மன்றத்தினரும் பயங்கர கொதிப்புடன் உள்ளார்கள்.

இந்நிலையில் வடசென்னை எம்ஜிஆர் மன்ற முன்னாள் தலைவர் ஓம்பொடி பிரசாத் செய்தியாளர்களிடம்கூறுகையில், அமைச்சர் திண்டுக்கல்சீனிவாசனின் இந்தக் கருத்து எங்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. அவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டு, கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் தமிழகம் முழுவதும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

எம்ஜிஆர் நிறுவிய கட்சியில் இருந்துகொண்டு,அவருடைய இரட்டை இலைச் சின்னத்தால் அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டு எம்ஜிஆர் புகழுக்கு களங்கம்கற்பித்த திண்டுக்கல் சீனிவாசன் தலைமை கழகத்துக்குள் இனி வர்வே கூடாது. ஒருவேளை அவர் வந்தால் நிச்சயம் எம்ஜிஆர் மன்றத்தினர் அவரைத் தாக்குவோம் என பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருக்கும் பிரச்சனைகள் போதவில்லை என திண்டுக்கல் சீனிவாசன் கட்சிக்குள்ளேயே புதுப்பிரச்சனையை கொண்டு வந்துவிட்டாரே என அதிமுக தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.

English summary
Minister Dindugal srinivasan should be quit from the ministry and he should not be in the party said Ex. Leader of North Chennai MGR mandram in press club, chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X