தமிழகத்தில் மோடி போட்டியிட்டால் எந்த தொகுதியையும் விட்டுக்கொடுப்போம் : விஜயகாந்த்
நாகர்கோவில்: மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், எந்த தொகுதியை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்போம் என விஜயகாந்த் கூறினார்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், கூறியதாவது:
''கன்னியாகுமரியில் பெரும்பாலானவர்கள் மீனவர்களாக இருக்கின்றனர். அந்த மீனவர்களுக்காக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார். ஆனால், அவர் கூறியபடி இதுவரை ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படவில்லை.
அதேபோல், ரப்பர் தோட்ட தொழில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்காக இதுவரை ஆண்ட அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எந்த நன்மையும் செய்யவில்லை. மேலும், பட்டா உள்ள நிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டுவதற்குகூட தமிழக அரசு அனுமதி தர மறுக்கிறது.
தமிழக மீனவர்களின் பிரச்னையை தீர்ப்போம் என பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகத்தில் போட்டியிட்டால், எந்த தொகுதியை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்போம். மோடி பிரதமராக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார் விஜயகாந்த்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications