பெரும்பான்மையை நிரூபிப்போம்.. அம்மா ஆட்சி தொடரும்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
"சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். மாண்புமிகு புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சி தொடரும்" என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களின் ஒரு கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார். "சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம். மாண்புமிகு புரட்சி தலைவி அம்மாவின் ஆட்சி தொடரும்" என்றார் அவர்.
இன்னும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், கெடு விதித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications