ஈவிகேஎஸ் இளங்கோவனின் வழிகாட்டுதல் இல்லாதது காங்கிரசுக்கு இழப்பு... சொல்வது குஷ்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மிகச்சிறந்த தலைவர்களில் இளங்கோவனும் ஒருவர். அவரது வழிகாட்டுதல் இல்லாதது இழப்புதான் என்று குஷ்பு கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று தலைமை பதவியில் இருந்து விலகினார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்த நிலை நிலவுகிறது. ராஜினாமாவை வாபஸ் பெறக்கோரி ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினார். ஆனாலும் கட்சித்தலைவி சோனியா காந்தி ஈவிகேஎஸ் இளங்கோவனின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அக்கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
|
சிறந்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, ''தமிழக காங்கிரசின் மிகச்சிறந்த தலைவர்களில் இளங்கோவனும் ஒருவர். அவரது வழிகாட்டுதல் இல்லாதது இழப்புதான்.
|
கட்சிப்பணி தொடரும்
இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றுவார் என்று பதிவிட்டுள்ளார்.
|
குறை சொல்வதா?
ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாதவர்கள் 8 தொகுதிகளில் வென்ற காங்கிரஸை குறை சொல்கிறார்கள் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

சிக்கலுக்குக் காரணம்
இளங்கோவன் பதவி விலக குஷ்புவும் ஒரு காரணம் என செய்திகள் வெளியாகி வந்தன. இதற்கு குஷ்புவோ, இளங்கோவனோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை இந்த நிலையில், இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளா குஷ்பு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications