இனி உங்களை கிண்டல் செய்யவே மாட்டோம் ரமணன் சார்: சென்னை மக்கள்
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணனை இனி கிண்டல் செய்யவே கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் சென்னை மக்கள்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிட்டால் மக்கள் அவரை சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கிண்டல் செய்து வந்தனர். இவர் இப்படி தான் மழை வரும் என்பார், நாமும் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம் கடைசியில் வெயில் தான் கொளுத்தும் என்று கிண்டல் செய்தனர்.

இந்நிலையில் தான் ரமணன் தற்போது எப்பொழுது எல்லாம் மழை பெய்யும் என்று கூறிகிறாரோ அப்பொழுது எல்லாம் மழை பெய்து கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களுக்கு ரமணனின் வாக்கு பலித்துக் கொண்டிருப்பதை பார்த்து பயம் வந்துள்ளது.
ரமணன் சார் ஃபுல் பார்மில் இருப்பது நமக்கு நல்லது இல்லை அதனால் இனி அவரை கிண்டல் செய்யக் கூடாது என்ற முடிவுக்கு சென்னை மக்கள் வந்துள்ளனர். அவர் விரைவில் பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.
மழை நின்னா போதும்டா சாமி என்று இருக்கும் சென்னை மக்கள் அவ்வப்போதும் பெய்யும் மழையால் மேலும் கதி கலங்கி போயுள்ளனர். இதற்கிடையே சென்னை வெள்ளத்தில் சிக்கி ரமணன் மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications