சென்னையில் 3 நாள் மழை நீடிக்கும் என்கிறார் ரமணன்.. குறையும் என்கிறது நார்வே வானிலை இலாகா!
சென்னை: நார்வே அரசின் வானிலை இலாகா வெப்சைட்டில், அனிமேஷனுடன் கூடிய துல்லியமான வானிலை அறிக்கை இடம் பெற்றுள்ளது. அதில் நாளை முதல் சென்னையில் மழை குறைய தொடங்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்கிறார்.
சென்னையில் வரலாறு காணாத கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. எப்போது மழை கொட்டும், எப்போது குறையும் என்று புரியாமல் மக்கள் தவிக்கிறார்கள். இந்த மக்களுக்கு உதவிகரமாக உள்ளது நார்வே அரசின் வானிலை இலாகா, வெப்சைட்.

இந்த வானிலை வெப்சைட்டில், நாள், நேரம் கணக்கில் வானில் உள்ள மேகங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. அனிமேஷன் காட்சியோடு அவை உள்ளது.
இந்த வெப்சைட் கூறுவதை பார்த்தால், நாளை சற்று மேகமூட்டம் விலகியிருக்கும். வெள்ளிக்கிழமை வானம் தெளிவடையும் என்பதை போல உள்ளது. தொடர்ச்சியாக இதை பார்த்து மழையை கணிக்க வாய்ப்புள்ளது.

நீங்களும் அறிந்துகொள்ள, இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
அதேநேரம், தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியது: வங்கக் கடலில் உருவாகியுள்ள இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக கடற்கரையோர மாவட்டங்களான திருவள்ளூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலை கொண்டுள்ளன. இது மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. சென்னையில் தரைக்காற்று வேகமாக வீசக் கூடும். மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
மேலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். அவ்வப்போது மிகக் கனமழை பெய்யும். தமிழகத்தில் பரவலாக அடுத்த 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications