For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது..மருத்துவர் அருட்செல்வன் திடுக் வாக்குமூலம்!

2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு இல்லை என மருத்துவர் அருட்செல்வன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது..வீடியோ

    சென்னை: 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு இல்லை என மருத்துவர் அருட்செல்வன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் செவிலியர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் அருள்செல்வன் மற்றும் ரேடியாலஜிஸ்ட் ரவிக்குமார் நேற்று ஆஜராகினர்.

    நரம்பு பாதிப்பால்

    நரம்பு பாதிப்பால்

    அப்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவர்கள் பல்வேறு தகவல்களை அளித்தனர். அதாவது, ஜெயலலிதாவுக்கு நரம்பு பாதிப்பால் கையில் ஏற்பட்ட நடுக்கம் தொடர்பாக சிகிச்சையளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கண்விழிவு அசைவு சோதனை

    கண்விழிவு அசைவு சோதனை

    2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு இஇஜி சோதனை நடத்தப்பட்டதாகவும் அவரது மூளையின் செயல்பாடு,நரம்பு மற்றும் கண் விழி அசைவு குறித்து பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கண்விழி அசைவில்லை

    கண்விழி அசைவில்லை

    அந்த சோதனையின் போது ஜெயலலிதாவுக்கு கண்விழி அசைவு மீண்டும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்று மருத்துவர் அருள்செல்வன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

    திடுக்கிடும் தகவல்

    திடுக்கிடும் தகவல்

    ஜெயலலிதா மரணமடைந்து 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் அவரது மரணத்தில் இன்னமும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Appollo Doctor Arulselvan said in Arumugasami commission what happend to Jayalalitha on December5th 2016.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X