ஆ.. பாலத்திற்கு மேலே இறக்கையா? ஓடி வந்த மக்கள்.. திருப்பத்தூர் பாலத்தை பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.. அட
புதிய காற்றாலை மில்லிற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தினமும் தமிழ்நாட்டை நோக்கி காற்றாலை இறக்கைகள் கொண்டு வரப்படுகின்றன.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் இன்று திடீரென பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் ஏற்பட்ட காரணமும், அங்கே மக்கள் கூடிய கூட்டமும் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.
மாற்று மின்சார உற்பத்தி முறைகளில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தற்போது மிகப்பெரிய முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரத்தில் புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்து உள்ளது.
இந்தியாவிலேயே முதல்முறையாக மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார். தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் தொழிற்சாலை வளாகத்தில் இந்த மின் நிலையத்தை தொடங்கி வைத்தார்.

காற்றாலை
காற்றாலை மின்சாரத்திலும் டென்மார்க்கிற்கு இணையாக தமிழ்நாடு கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. தேனி, தென் மாவட்டங்களில் நெல்லை, கன்னியாகுமரி அருகே பல்வேறு இடங்களில் வழி நெடுக காற்றாலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த காற்றாலைகள்தான் தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் பெரிய அளவில் மின்சார தேவையை பூர்த்தி செய்யவும் உள்ளன. இன்னொரு பக்கம் கடலில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது.

கடலில் காற்றாலை
இதற்காக யு.கே நாட்டை சேர்ந்த அதிகாரிகள் விரைவில் தமிழ்நாடு வர உள்ளனர். இவர்கள் தூத்துக்குடி, கன்னியாகுமரி கடல் பகுதிகளை பார்வையிட உள்ளனர். அங்கே கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளனர். தமிழ்நாடு தனி நாடாக வைத்து பார்த்தால் உலகிலேயே இரண்டாவது பெரிய காற்றாலை மின்சார உற்பத்தி நாடாக இருக்கும். அந்த வகையில் தமிழ்நாட்டின் இந்த முயற்சி காரணமாக உலகிலேயே காற்றாலை உற்பத்தியில் நம்பர் 1 இடத்தை பிடிக்க கூட வாய்ப்புகள் உள்ளன.

காற்றாலை
புதிய காற்றாலை மில்லிற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள தினமும் தமிழ்நாட்டை நோக்கி காற்றாலை இறக்கைகள் கொண்டு வரப்படுகின்றன. ஓசூர் வழியாக இந்த காற்றாலைகள் தென் மாவட்டங்களை நோக்கி கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. தமிழ்நாட்டில் பெங்களூர் - திருச்சி நெடுஞ்சாலை, திருச்சி - நெல்லை நெடுஞ்சாலையில் செல்லும் பலர் சாலை ஓரத்தில் காற்றாலை இறக்கைகள் இருப்பதை பார்த்து இருப்பார்கள். இவை எல்லாம் தென் மாவட்டங்களை நோக்கி எடுத்து செல்லப்படும் காற்றாலைகள்தான்.

போக்குவரத்து நெரிசல்
இந்த நிலையில்தான் திருப்பத்தூர் அருகே வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் இன்று திடீரென பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காற்றாலை இறக்கையை கொண்டு சென்ற கனரக வாகனம் ஒன்று வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் மீது கனரக வாகனம் பழுதாகி நின்றது. பாலத்தின் நடுவே அப்படியே இறக்கையோடு இந்த வாகனம் பழுதாகி நின்றது. தற்போது இதன் புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகின்றன.

மக்கள் கூட்டம்
இதை பார்க்க இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்தனர். பாலத்தின் நடுவே இறக்கை மாட்டிகொண்டது போல அங்கு அந்த கனரக வாகனம் நின்றதால் அதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். என்ன இது பாலத்தின் மீது இப்படி காற்றாலை இறக்கை நிற்கிறதே என்று அதை பார்க்க மக்கள் பலர் கூட்டமாக கூடினார்கள். இந்த வாகனத்தை சரி செய்ய நீண்ட நேரம் ஆனதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலத்தின் பாதியை இதன் இறக்கை அடைத்துக்கொண்டதால் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications