For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவ்வளவு அடிவாங்கியும் போலீசுக்கு போகாத சத்யா.. பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதலின் பரபர பின்னணி

Google Oneindia Tamil News

Recommended Video

    பெரம்பலூர் பியூட்டி பார்லர் தாக்குதலின் பரபர பின்னணி- வீடியோ

    சென்னை: பியூட்டி பார்லருக்குள் புகுந்து திமுக பிரமுகர் ஒருவர் பெண்ணை தாக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பெரம்பலூரில் அழகு சாதன கடை நடத்தும், சத்யா என்ற பெண்ணை, பியூட்டி பார்லருக்கு உள்ளேயே புகுந்து, திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ் என்பவர் தாக்கும் காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகி மீடியாக்களில் வெளியாகியிருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக திமுகவில் இருந்து செல்வராஜை தற்காலிகமாக நீக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    யார் இந்த செல்வகுமார்

    யார் இந்த செல்வகுமார்

    ஒரு பெண்ணை அழகு சாதன கடைக்குள் புகுந்து அடிக்கும் அளவுக்கு அங்கு என்ன பிரச்சினை என்பது குறித்து விசாரித்தோம். அப்போது இதன் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தன. திமுக பிரமுகர் செல்வகுமார் பெரம்பலூரில் ஸ்டீல் தொழிற்சாலை வைத்துள்ளாராம். இவருக்கும் சத்யாவிற்கும் நீண்டகாலமாகவே பழக்கம் இருந்தது. அதாவது, முன்பின் தெரியாதவர் கிடையாது.

    உட்கட்சி பிரச்சினையான நட்பு

    உட்கட்சி பிரச்சினையான நட்பு

    இந்த நிலையில், சத்யாவிற்கும், திமுகவை சேர்ந்த மற்றொரு பிரமுகருக்கும் நட்பு உருவாகியுள்ளது. அந்த பிரமுகர், செல்வகுமாருக்கு எதிரானவர். எனவே செல்வகுமார், இதுபற்றி சத்யாவிடம் தகராறு செய்தபடி இருந்துள்ளார். நட்பு என்பது மனதுடன் தொடர்புடையது, கட்சி சண்டையை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் என்று செல்வகுமாரிடம் சத்யா கூறிவிட்டதாக தெரிகிறது.ஆனாலும் பண விவகாரங்களை சத்யாவுடன் கையாண்ட செல்வகுமாருக்கு இதை ஏற்க முடியவில்லை. பணம், நட்பு என இரு விஷயங்களும் செல்வகுமாரை கோபத்திற்கு தள்ளியுள்ளது.

    ஸ்டாலினுக்கு போன புகார்

    ஸ்டாலினுக்கு போன புகார்

    உட்கட்சிக்குள்ளேயே இருவர் சத்யாவின் நட்பு தொடர்பாக அடித்துக்கொண்டதால், அந்த விஷயம் ஸ்டாலினின் வாட்ஸ்அப்பிற்கு புகாராக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். இதையறிந்ததும், இம்மாவட்டத்தில் செல்வாக்கு கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், செல்வகுமார் உட்பட இந்த பிரச்சினையில் தொடர்புள்ள கட்சியினரை பிடித்து திட்டிவிட்டாராம்.

    வீடியோ பாம்

    வீடியோ பாம்

    இவ்வளவு தாக்குதலுக்கு உள்ளாகியும், நட்புக்கு மரியாதை கொடுத்து செல்வகுமார் மீது சத்யா புகார் அளிக்காமல் இருந்தாராம். பெரிய பிரச்சினையாக வரும் என்று நினைத்தால், இப்படி அமுக்கி விட்டார்களே என்று நினைத்த ஒரு கோஷ்டி, இந்த வீடியோவை எப்படியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வீடியோ வெளியானதால், மாதர் சங்கம் பிரச்சினையை கையில் எடுக்கும் என்பதால், அவசரமாக செல்வகுமாரை கைது செய்துள்ளதாம் காவல்துறை.

    English summary
    What are the motives behind perambalur beauty parlour attack, here you can find the detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X