எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பிரஷர் ஏற்றத்தான் பிரஷர் குக்கர் சின்னம்: டிடிவி தினகரன் தடாலடி
குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு டி.டி.வி தினகரன் நன்றி தெரிவித்து உள்ளார்.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதற்கு தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
ஆர்.கே நகருக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களை பரிசீலித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

இதில் 59 பேர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்.கே நகரில் கடந்த முறை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, டி.டி.வி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
அதனால், இந்த முறையும் தொப்பி சின்னத்திற்கு குறி வைத்த டி.டி.வி தினகரன் நீதிமன்றம் வரை சென்றும் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. மாறாக நமது கொங்கு முன்னேற்ற கழகம் என்கிற கட்சி வேட்பாளருக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
தொப்பி இல்லாவிட்டால் கிரிக்கெட் பேட், விசில் போன்ற சின்னங்களில் எதோ ஒன்று கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தது தினகரன் அணி. ஆனால், குலுக்கல் முறையில் அந்த சின்னங்களும் வேறு சுயேச்சை வேட்பாளர்களுக்கு போய்விட, தற்போது தினகரனுக்கு ப்ரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
குக்கரை வைத்து என்ன செய்வார் தினகரன் என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்து இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை வைத்து எனக்கு வெற்றி பெற தெரியும். துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் ப்ரஷர் கொடுக்கவே இந்த சின்னத்தை தேர்ந்தெடுப்பதாக கூலாக பதில் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications