ஆம்புலன்ஸில் வீல் சேரில் வந்து +2 தேர்வு எழுதிய மாணவரை ஞாபகம் இருக்கா? 565 மார்க் எடுத்து அசத்தல்!
ராமநாதபுரம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு சமயத்தில் விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸில் வீல் சேரில் வந்து தேர்வுகளை எழுதிய மாணவர், 600க்கு 565 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆம்புலன்ஸில் வந்து பொதுத்தேர்வு எழுதினார் மாணவர் சமயரித்திக். இந்நிலையில், இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அவர் அதிக மதிப்பெண்களைப் பெற்று அசத்தி உள்ளார்.

ஆம்புலன்ஸில் சென்று தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை அருகே உள்ள மோர் பண்ணை மீனவ கிராம பகுதியைச் சேர்ந்த மாணவர் சமயரித்திக்கிற்கு பொதுத்தேர்வுக்கு சில நாட்கள் முன்னதாக ஒரு விபத்தில் காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. நன்றாகப் படிக்கும் மாணவரான சமயரித்திக், தேர்வு நேரத்தில் இப்படி ஆனதால் கலக்கமடைந்தார். ஆனாலும், நன்றாகப் படித்து தேர்வை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
பெற்றோர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலமாக பள்ளிக்குச் சென்று தேர்வுகளை எழுதினார் மாணவர் சமய ரித்திக். வீல் சேரில் தேர்வு அறைக்குச் சென்று அனைத்து தேர்வுகளையும் எழுதினார் சமய ரித்திக். இந்நிலையில், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார் சமயரித்திக்.
600க்கு 565 மதிப்பெண்
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மாணவர் சமயரித்திக், 600க்கு 565 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தற்போது சமயரித்திக், உயர் சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
மாணவர் சமயரித்திக் பேட்டி
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள மாணவர் சமயரித்திக், "நான் நடக்க முடியாத நிலையில் என்னை தேர்வு எழுத வீல் சேரில் அழைத்துச் சென்று உதவிய பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பொதுத் தேர்வின் போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தேன். மருத்துவமனையில் இருந்தபடியே தேர்வுகளுக்கு படித்து தேர்வுகளை எழுதினேன்.
மருத்துவத் துறை சார்ந்து படிக்க விரும்புகிறேன். நீட் தேர்வு எழுத திட்டமிட்டு தயாராகி வந்தேன். ஆனால், எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருவதால் தற்போது எழுத முடியவில்லை." எனத் தெரிவித்துள்ளார் சமயரித்திக்.
பிளஸ் 2 ரிசல்ட்
பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதிய நிலையில் மொத்த தேர்ச்சி விகிதம் 95.03% ஆகும். இதில் மாணவர்கள் 93.16%, மாணவியர்கள் 96.70% தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 3.54% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல் அரசு பள்ளிகளில் 91.94% தேர்ச்சியும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 95.71% தேர்ச்சியும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 98.88% தேர்ச்சியும் ஆகும். +2 பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக பார்க்கையில் அரியலூர் மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாவட்டம் 98.82 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இதையடுத்து ஈரோடு மாவட்டம் 97.98 சதவீதம், திருப்பூர் மாவட்டம் 97.53 சதவீதம், கோயம்புத்தூர் மாவட்டம் 97.48 சதவீதம், கன்னியாகுமர் மாவட்டம் 97.01 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளது.
+2 பொதுத்தேர்வில் 26,887 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100க்கு 100 திப்பெண் எடுத்துள்ளனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 2,853. தமிழில் 135 மாணவர்களும் இயற்பியல் பாடத்தில் 1,125, வேதியியல் பாடத்தில் 3,181, உயிரியல் பாடத்தில் 827, கணிதம் பாடத்தில் 3,022, தாவரவியல் பாடத்தில் 269, விலங்கியல் பாடத்தில் 36, கணினி அறிவியல் பாடத்தில் 9,536, வணிகவியல் பாடத்தில் 1,624, கணக்கு பதிவியல் பாடத்தில் 1,240, பொருளியல் பாடத்தில் 556, கணினிப் பயன்பாட்டில் 4,208, வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் பாடத்தில் 273 மாணவர்களும் சென்டம் எடுத்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications