தமிழகத்தில் மோடி பிரச்சாரம்: எந்த தொகுதியில் யாருக்கு என்பதில் குழப்பம்?
சென்னை: மோடியின் தமிழகம் வருகை மற்றும் பிரசாரம் தொடர்பாக பாஜக கூட்டணி கட்சி தலைவர்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர், மதுரை, சேலம், தர்மபுரி, கன்னியாகுமரி என பாஜகவினரும், கூட்டணிக்கட்சித்தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளதால் தமிழகம் வருகை தரும் மோடி யாருக்கு எந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று இன்னமும் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜ அலுவலகத்தில் கூட்டணி கட்சி தலைவர் களின் ஆலேசானை கூட்டம் நடைபெற்றது.
அதில், பிரசாரத்திற்காக பாஜக பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி, அத்வானி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களை அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

மோடியின் தமிழக வருகை
இந்நிலையில், வருகிறது 6ம் தேதி, நரேந்திர மோடியை தமிழகத்திற்கு பிரசாரத்திற்கு வருமாறு தமிழக பாஜக சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

எத்தனை தொகுதியில்?
இதில், கூட்டணி கட்சி தலைவர் களான ராமதாஸ், நரேந்திர மோடி தருமபுரியில் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும், மதிமுக பொது செயலாளர் வைகோ மதுரையில் வந்து பிரசாரம் செய்யுமாறும், தேமுதிக தலைவர் விஜய காந்த் சேலம் தொகுதிக்கு மோடி வரவேண்டும் என்றும், பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதிக்கு மோடி வர வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வருகையில் குழப்பம்
கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொரு வரும் மோடியை தங்கள் தொகுதிக்கு அழைப்பதால், அவர் எந்த தொகுதிக்கு வருவார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால், எங்கு பேச வேண்டும் என்பதை மோடி முடிவு செய்வார்.

பாஜக கூட்டணி தொகுதிகள்
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு 14 இடங்க ளும், பாமக மற்றும் பாஜவுக்கு தலா 8 இடங்களும், மதிமுகவுக்கு 7 இடங்களும், கொங்கு மக்கள் கட்சிக்கு 1 இடமும், ஐஜேகேவுக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தீவிர பிரச்சாரம்
கூட்டணி கட்சி தலைவர்களான விஜயகாந்த், ராமதாஸ், வைகோ மற்றும் பாஜ தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜயகாந்த் பிரச்சாரம்
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த 14ம் தேதி திருவள்ளூர் தனி தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அவரின் முதல் கட்ட பிரசாரத்தில் ஒவ் வொரு நாளும் 3 தொகுதிகள் என, 14 நாள் பிரசாரத்தில் ஈடுபட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்கவுள்ளார்.

சென்னை, திருச்சி
ஏற்கனவே, நரேந்திரமோடி சென்னையில் நடைபெற்ற மாநாட்டிலும், திருச்சி மாநாட்டி லும் கலந்து கொண்டதால் இந்த இரு மாவட்டங்களை தவிர மாற்ற இடங்களில் ஏதாவது ஒன்றில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

மோடியின் யாருக்கு பிரச்சாரம்?
ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தையில் கட்சிகள் இடையே நீண்ட இழுபறி ஏற்பட்டுள்ளது. இப்போது மோடி வருகையிலும், பிரசாரத்திலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் கட்சிகளுக்கிடையே அதிருப்பதியும், குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications