தினகரன் என்ன சிஎம்ஆ? கலெக்டரா? பிரதமரா? வறுத்தெடுத்த தீபா... வாங்கிக்கட்டிய இன்ஸ்பெக்டர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தினகரன் என்ன கவர்மெண்டா? முதல்வரா? கலெக்டரா என்று கேட்டு இன்ஸ்பெக்டரை வறுத்தெடுத்துள்ளார் தீபா. தீபாவின் அர்ச்சனையை கேட்ட இன்ஸ்பெக்டர் உங்க அறிக்கையே வேணாம் ஆளை விடுங்க என்று தலை தெறிக்க ஓடிவிட்டார்.

தீபா அலுவலக தொலைபேசிக்கு போன் செய்த இன்ஸ்பெக்டர் ஒருவர், டிடிவி.தினகரன் குறித்து தீபா அறிக்கை வெளியிட்டது உண்மை தானா? ஏன் இதுபோன்று அறிக்கை வெளியிடுகிறார், அந்த அறிக்கையை எனக்கு உடனே அனுப்புங்கள் என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Who is Dinakaran ask Deepa viral audio

நான் தீபா மேடத்திடம் பேச வேண்டும் என்று கேட்டு அடிக்கடி போன் செய்ததாக தெரிகிறது. இதையடுத்து, அந்த இன்ஸ்பெக்டரிடம் தீபா போனில் பேசியுள்ளார்.

தீபாவிற்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையே நடந்த உரையாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தீபா: ஹலோ சொல்லுங்க சார், என்ன கேட்கணும்.

இன்ஸ்பெக்டர்: அறிக்கை சம்மந்தமாக கேட்டேன்.

தீபா: அதை எதுக்கு நீங்க கேக்குறீங்க.
இன்ஸ்பெக்டர்: எங்கள் ஆபீஸ்ல கேட்பாங்க மேடம். எந்த தலைவர் அறிக்கை விட்டாலும் அது அரசுக்கு செல்லும்.

தீபா: சரி.. இவரு என்ன அரசாங்கமா? முதல்வரா? தினகரன் யாருங்க.

இன்ஸ்பெக்டர்: அதுக்கு கேட்கலங்க.

தீபா: நான் எடப்பாடி பழனிச்சாமி பெயர்ல அறிக்கை கொடுக்கல சரியா. தினகரன் யாருன்னு முதல்ல சொல்லுங்க. சசிகலாவோட அக்கா பையன். அதனால அறிக்கை கொடுக்க கூடாதா? அவரு என்ன முதல்வரா, பிரதமரா சொல்லுங்க. நீங்க ஐபிஎஸ் அதிகாரி தானே?

இன்ஸ்பெக்டர்: இல்லை. ஐபிஎஸ் இல்லை மேடம்.

தீபா: நான் யாரு தெரியுமா? நான் என்ன படிச்சிருக்கேன் தெரியுமா? அவருக்கு என்ன அதிகாரம் இருக்குன்னு என்கிட்ட கேட்கிறீங்க.

இன்ஸ்பெக்டர்: இல்ல மேடம். நான் சொல்றது கேட்டுவிட்டு பேசுங்க.

தீபா: ஒரு தலைவரை பற்றி அறிக்கை விட்டால் நீங்க கேட்கலாம். தினகரன் தலைவரே இல்லை.

இன்ஸ்பெக்டர்: சரி விடுங்க. உங்க அறிக்கையே வேண்டாம், வேண்டாம், வேண்டாம் உங்க அறிக்கையே வேண்டாம் மேடம் என்று கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.

தீபாவின் அறிக்கையை கேட்டு வாலண்டரியாக வந்து வாங்கிக் கட்டிக்கொண்டார் இன்ஸ்பெக்டர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran is a cm or collector asked Jayalaithaa nice Deepa to inspector, the audio going viral in social media.
Please Wait while comments are loading...