ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் வளர்மதியா, ஜெ.வா? – பாவம் ஜெயா டிவியே குழம்பிடுச்சு!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலையில் இருந்து தொடங்கி நடைபெற்று அக்கட்சியின் வேட்பாளரான வளர்மதி வெற்றியும் பெற்றுள்ள நிலையில் இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் வளர்மதியா, ஜெயலலிதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு பார்ப்பவர்களை குழப்பி வருகின்றது ஜெயா டிவி.
காரணம் ஒரு முறை கூட வேட்பாளரின் முகத்தை அது காட்டவில்லை. மாறாக முன்னாள் எம்எல்ஏ ஜெயலலிதா படத்தையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
காலையிலிருந்து வாக்கு முன்னணி நிலவரங்களை வெளியிட்டு வருகின்ற ஜெயா டிவி, வாக்கு நிலவரம் போடும் போது மருந்துக்கு கூட வளர்மதியின் புகைப்படத்தை காட்டவில்லை. ஒரு சிறிய ஸ்டாம்பு சைஸ் போட்டோ கூட எண்ணிக்கை குறித்த செய்திகளில் வெளியிடப்படவில்லை. வளர்மதியின் பெயரைக் கூட உச்சரிக்கவி்ல்லை யாரும்.

இதுகூட பரவாயில்லை காலையில் பேசிக் கொண்டிருக்கும்போதே ஓரிடத்தில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்த நேரடித் தொகுப்பாளர் மக்கள் முதல்வர் ஜெயலலிதா இத்தனை வாக்குகள் முன்னணியில் உள்ளார்?! என்று உணர்ச்சி பெருக்கில் கூறி, வேட்பாளர் வளர்மதி என்பதையே மறந்து விட்டார்.
இரட்டை இலையும், பெரிய அளவில் "அம்மா" புகைப்படமும் மட்டுமே வாக்கு நிலவரம் குறித்த பகுதியில் இடம் பெற்று வந்தது. அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்று கூறினாலும் பரவாயில்லை ஆள்மாற்றி ஆள் ஜெயலலிதாவிற்கு கிடைத்த வெற்றி என்றே கூறிக் கொண்டிருந்தனர் மாற்றி மாற்றி.
பாவம் ஜெயலலிதா தொகுதியில் தைரியமாக தேர்தலில் நின்று அவரைவிடவும் அதிக வாக்குகள் பெற்று ஜெயித்துள்ள காரணத்திற்காகவாவது கொஞ்சம் பெரிய மனசுடன் வளர்மதி போட்டோவை சின்ன அளவிலாவது போடுங்க பாஸ்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications