தேமுதிகவால் வெளிச்சத்துக்கு வந்த வி.சி.சந்திரகுமார்.. இன்று "கலக நாயகன்" அவதாரம்!
சென்னை: ஈரோட்டு வி.சி.சந்திரகுமார் இன்று அகில உலகப் புகழ் பெற்று விட்டார்.. விஜயகாந்த்தை விமர்சித்து கட்சியை உடைத்ததன் மூலம்.
மக்கள் நல கூட்டணியுடன், தேமுதிக இணைந்ததால் தேமுதிகவில் பெரும் அதிருப்தி வெடித்துள்ளது. நாளை மதியத்திற்குள் திமுகவோடு கூட்டணி வைக்கும் முடிவை தேமுதிக அறிவிக்க வேண்டும் என்று கட்சி கொறடாவும், கொள்கை பரப்பு செயலாளருமான சந்திரகுமார் எம்.எல்.ஏ தலைமையிலான 3 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்த்துக்கு கெடு விதித்துள்ளனர்.
ஈரோட்டைச் சேர்ந்தவரான வி.சி.சந்திரகுமார், விஜயகாந்த் ரசிகர் மன்றத்திலிருந்து தேமுதிகவுக்கு மாறியவர். அவரது அரசியல் வாழ்க்கைக்கு வழிவகுத்ததே தேமுதிகவும், அதனால் கிடைத்த எம்.எல்.ஏ பதவியும்தான்.

ஈரோட்டில் வெற்றி:
தேமுதிக தனது முதல் இரு தேர்தல்களைத் தனித்துச் சந்தித்தபோது ஈரோட்டில் போட்டியிட்டு தோல்வியுற்றார் சந்திரகுமார். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஈரோட்டில் வெற்றி பெற்று சட்டசபை வந்தவர்.

விஜயகாந்துக்கு அடுத்து:
விஜயகாந்த் மட்டுமல்லாமல், பிரேமலதா விஜயகாந்த்தும் இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். கிட்டத்தட்ட விஜயகாந்த்துக்கு அடுத்தஇடத்தில் இருவர் இருந்தார்.

சந்திரகுமார் ராஜ்ஜியம்:
சட்டசபையிலும் கூட விஜயகாந்த் இல்லாத நிலையில் சந்திரகுமார்தான் கட்சியை நடத்தி வந்தார். சுந்தரராஜன் போன்றவர்களை விட சந்திரகுமாரைத்தான் விஜயகாந்த் அதிகம் நம்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படிலாம் பேசினியேப்பா:
சந்திரகுமார் முன்பு கூட்டணி குறித்த வதந்திகள் எழுந்தபோது, "தேமுதிக என்ற கட்சியை 2005ல் ஆரம்பித்து இத்தனை ஆண்டுகாலம், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், இந்த அளவிற்கு கட்சியை வளர்த்தவருக்கு தேமுதிகவை எப்படி கொண்டு செல்லவேண்டும் என்பது தெரியாதா? மக்களின் நலன் கருதி அவர் எடுக்கும் எந்தவொரு தைரியமான முடிவும், நல்ல முடிவாகவே இருக்கும். அந்த நல்ல முடிவை தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மட்டுமல்ல, தமிழக மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள்" என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படியோ ஈரோடு சந்திரகுமார், இப்போது கலக நாயகன் ஆகி விட்டார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications