பாஜகவை விமர்சித்ததால் கல்தா கொடுக்கப்பட்ட மருதுஅழகுராஜ்... நமது அம்மா பத்திரிக்கையில் ஆசிரியரா?
நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், பாஜகவை கடுமையாக விமர்சித்ததால் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவின் புதிய நாளேட்டின் ஆசிரியராக அவர் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறத
சென்னை : டாக்டர் நமது எம்ஜிஆரில் ஆசிரியராக இருந்த மருதுஅழகுராஜ் பாஜகவை கடுமையாக விமர்சித்து சித்திரகுப்தன் கவிதைகள் எழுதியதால் நீக்கப்பட்ட நிலையில் அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள புரட்சித் தலைவி டாக்டர் நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழும், ஜெயா டிவியும் ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் இருந்தன. கட்சியைப் போலவே இதில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் கட்சியின் குரலாகவே ஒலித்துக் கொண்டிருந்தன. ஜெயலலிதாவை மீறி எந்த சிறுவார்த்தையும் அதில் இடம்பெறாது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் கட்சி இரண்டு அணிகளானது. கட்சித்தலைமைப் பதவிக்கு வந்த சசிகலாவுடன் முரண்பட்டு ஓ.பி.எஸ் தனி அணியாக செயல்பட்டார். தான் சிறை செல்ல நேர்ந்தபோது அதிகாரப்பொறுப்பாக முதல்வர் பதவியில் எடப்பாடியை அமரவைத்தார் சசிகலா. தான் ஆட்சியமைக்காமல் போனதில் மோடியின் பங்கு அதிகம் என்பதை உணர்ந்த சசிகலா தங்கள் குடும்பத்தின் மீது மோடி அதிக கோபத்தில் இருப்பதாக கருதிய நேரத்தில் அதை உறுதிப்படுத்துவதுபோல் கட்சியின் சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாக தினகரன் கைது செய்யப்பட்டார்.

குழம்பி இருந்த நமது எம்ஜிஆர்
இப்படி மத்திய அரசின் மீது சொல்லமுடியாத எரிச்சலில் சசிகலா, தினகரன் தரப்பு இருக்க, ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக எடப்பாடி அரசு மத்திய அரசுக்கு பல விஷயங்களில் அனுசரணையாக போக்கை கடைபிடித்தது. இந்த நிலையில் கட்சிப்பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர், 3 அணிகளில் எந்த அணியின் சார்பாக கருத்துக்களை வெளியிடுவது என்ற குழப்பத்தில் இருந்தது.

விவேக் கட்டுப்பாட்டில் போன மீடியாக்கள்
எனினும் தொடர்ந்து மாநில அரசை விமர்சிக்காமல் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இதன் ஆசிரியராக செயல்பட்டு வந்த மருதுகணேசும் 3 அணிகளின் குழப்பம் பற்றி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனிடையே நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி நிர்வாகம் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் பொறுப்பில் இருப்பதால் சசியின் ஆதரவு நிலைப்பாட்டில் செய்திகள் வெளிவரத்தொடங்கின.

பாஜகவை விமர்சித்து
நமது எம்.ஜி.ஆரில் அரசின் செய்திகளும் அவ்வப்போது இருட்டடிப்பு செய்யப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதியன்று சித்திரகுப்தன் எனும் பெயரில்'மூச்சுமுட்ட பேச்சு, மூன்றாண்டு போச்சு'எனும் தலைப்பில் அரைப் பக்கம் நையாண்டி கருத்துப்படம் வெளியானது. இது நேரடியாக பாஜக அரசின் ஆட்சியை விமர்சித்தது. சித்திரகுப்தன் என்ற பெயரில் அதை எழுதியவர் அதன் ஆசிரியர் மருது அழகுராஜ்.

மருதுஅழகுராஜா நீக்கம் ஏன்?
தொடர்ந்து பாஜகவை விமர்சித்து பல கட்டுரைகளை அவர் எழுதி வந்தார். இந்நிலையில் இவர் ஓ.பன்னீர்செல்வம் அணியை சந்தித்ததாக எழுந்த சர்ச்சையை எழுந்தது. இதற்கு தன்னுடைய ஆன்மா கூட ஓ.பன்னீர்செல்வம் வீட்டு படிக்கட்டிற்கு செல்லாது என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்தும் பதிவிட்டிருந்தார். எனினும் அவர் நமது எம்ஜிஆர் இதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுக நாளிதழின் ஆசிரியராகிறார்?
இந்நிலையில் அதிமுக சார்பில் நமது அம்மா என்ற பத்திரிகையும், அம்மா டி.வி.என்ற சேனலையும் ஆரம்பிக்க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. புரட்சித் தலைவர் நமது அம்மா, பத்திரிகைக்கு மருது அழகுராஜை ஆசிரியராக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்ததால்தான் நமது எம்.ஜி.ஆர்.ஆசிரியர் பொறுப்பிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டார் மருதுகணேஷ். இந்நிலையில், பாஜகவின் ஊதுகுழலான - எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தலைமையில் ஆரம்பிக்கப்படும் பத்திரிகைக்கு மருதுகணேஷ் ஆசிரியராக நியமிக்கப்படுகிறார் என்பது யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
-
தமிழகத்தில் 10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. மொத்தமாக எகிறிய வெப்பநிலை! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல்












Click it and Unblock the Notifications