அமித் ஷா அலுவலகம் உள்ளே போனதும்.. ஸ்டன் ஆன எடப்பாடி.. அங்கே கண்ட காட்சி..அப்படியே ஷாக் ஆகிட்டாராமே!
சென்னை: அமித் ஷா அறைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை கண்டார். அங்குதான் டிவிஸ்ட் ஏற்பட்டது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்து உள்ளார்.
நேற்று முதல் நாள் டெல்லியில் அண்ணாமலை - அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இடையில் டெல்லியில் நடந்த மீட்டிங் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

சுமார் 50 நிமிடங்கள் இவர்கள் நீண்ட ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றனர். இந்த மீட்டிங்கிற்கு பின் மாநில பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எங்களுக்கு எந்தவித தகராறும் இல்லை, என்று எடப்பாடி பழனிசாமி புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
இவர்கள் மூவரும் நடத்திய டெல்லி மீட்டிங்கில் என்ன நடந்தது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், எடப்பாடியின் டெல்லி விசிட்டை பொறுத்தவரை அவரின் டெல்லி பயணத்தில் வெற்றிபெற்று விட்டார். கர்நாடக தேர்தலை காரணம் காட்டி அவர் தேர்தல் ஆணையத்திடம் சின்னத்தை பெற்றுவிட்டார். அதேபோல் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற பெயரையும் பெற்றுவிட்டார்.
அதிமுக உட்கட்சி மோதல் விவகாரத்தில் அவர் முக்கால் கிணறு தாண்டி விட்டார்,. இனி அவருக்கு பிரச்சனை இல்லை. இன்னும் உச்ச நீதிமன்றத்திலும் , சிவில் கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியாக இருக்கிறார்.

இந்த டெல்லி பயணத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. அமித் ஷாவும் கூட்டணி உள்ளது என்பது உறுதியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமியும் கூட்டணி உள்ளது என்று சொன்னது உறுதியாகிவிட்டது.
ஆனால் அமித்ஷா அறைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்காத ஒரு விஷயத்தை கண்டார். அங்குதான் டிவிஸ்ட் ஏற்பட்டது. அண்ணாமலை அங்கே வருவார் என்பதை எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கவில்லை.

எடப்பாடி இதை எதிர்ப்பார்க்கவில்லை. அண்ணாமலை இல்லாமல் அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி நினைத்தார். அண்ணாமலை பற்றி புகார் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி சென்றுள்ளார். ஆனால் அது நடக்கவில்லை.
இப்போது நடப்பதன் அர்த்தம்.. அண்ணாமலை இதற்கு முன் பேசியதற்கு எல்லாம் டெல்லிதான் காரணம். டெல்லியின் அனுமதியோடுதான் அண்ணாமலை இப்படி பேசினார் என்பது தெளிவாகிறது. இடையில் மோடியை சந்திக்க அண்ணாமலை வரவில்லை.
அதிமுகவுடன் மோதலில் இருக்கிறது, ஆருத்ராவில் சிக்கிக்கொண்டார் என்பது போன்ற விஷயங்களால் அண்ணாமலை ஒதுக்கப்படுகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அதிமுக மீட்டிங்கில் அண்ணாமலையை அழைத்து வந்து பேசி இருக்கிறார்கள்.
கர்நாடகாவில் தேர்தல் வேலையை பார்த்தவரை அவசரமாக அழைத்து வந்து பேசி இருக்கிறார்கள். அதனால் அதிமுக ஷாக்கில் உள்ளது. இவரை பற்றி புகார் கொடுக்க வேண்டும் என்றுதான் அதிமுக சென்றது. அது நடக்கவில்லை. ஆனால் அண்ணாமலைக்கும் அங்கு வாய்பூட்டு போட்டு இருக்கிறார்கள்.

நம்ம கட்சி பற்றி எதை வேண்டுமானாலும் பேசு. என்ன வேண்டுமானாலும் சொல்லு. ஆனால் கூட்டணி கட்சி பற்றி பேசாதே என்று கூறி இருக்கிறார்கள். அதனால் அண்ணாமலை இனி பேச மாட்டார்.
இந்த மீட்டிங்கில் கூட்டணி இடங்கள், தொகுதிகள் குறித்தும் பேசி இருக்கிறார்கள். நாங்கள் வளர்ந்து இருக்கிறோம். நாங்கள் பெரிய ஆள் ஆகிவிட்டோம். அதனால் எங்களுக்கு அதிக இடங்கள் தேவை என்று பாஜக கேட்டுள்ளது.
ஆனால் நீங்கள் வளரவில்லை என்று அதிமுக சொல்லி உள்ளது. ஆனால் பாஜகவோ.. உங்கள் கட்சிக்கு உள்ளேயே மோதல் இருக்கிறது. உங்களுக்கு இடையிலேயே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றது. அப்படி இருக்க ஓபிஎஸ் வேறு இப்போது இல்லை.
தென் மண்டலத்தில் கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது. அதனால் உங்களுக்குத்தான் சிக்கல். எனவே எங்களுக்கு அதிக இடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் இப்போது இதை பற்றி பேச வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு, அப்படியே கூட்டணியை மட்டும் உறுதி செய்துள்ளனர் . அதிமுகவிற்கும் கூட்டணி வைக்க வேறு ஆட்கள் இல்லாததால் இதற்கு ஓகே சொல்லி இருக்கிறது, என்று தெரிவித்து உள்ளார் பத்திரிகையாளர் ப்ரியன்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications