Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வேப்ப மரத்தடியில்" கள்ள ஜோடி.. 12 வயது வித்தியாசமாம்.. இந்தம்மாவுக்கு 3 பிள்ளைகள் வேற.. காலக்கொடுமை

வேப்பமரத்தடியில் கள்ளக்காதல் ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: முறைதவறிய தவறான உறவுகள் பெருகி வரும் சூழலில், மதுராந்தகத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் நடந்த பகீர் சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் என்ற கிராமம்... இந்த கிராமத்தை ஒட்டி, அடர்ந்த மரங்கள் நிறைய உள்ளன..

அங்குள்ள ஒரு வேப்ப மரத்தில் ஆண், பெண் 2 பேர் சடலமாக தொங்குவதை, அந்த பகுதி மக்கள் பார்த்து அதிர்ந்தனர். உடனடியாக பதறி அடித்துக்கொண்டு, ஊருக்குள் சென்று தகவல் சொன்னார்கள்..

 மரத்தடியில்..

மரத்தடியில்..

பிறகு போலீசாருக்கும் தகவல் தரப்பட்டது.. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வேப்ப மரத்தில் தொங்கிய 2 சடலங்களையும் கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... இருவருமே ஒரே மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தனர்.. பிறகு விசாரணையை துவங்கினர்.. ஆணின் பெயர் அருள்ஜோதி என்பதும், பெண்ணின் பெயர் முத்துலட்சுமி என்பதும் தெரியவந்தது.. இருவருமே மதுரையைச் சேர்ந்தவர்கள்.. இருவருமே உறவினர்களும் ஆவார்.

 முத்துலட்சுமி

முத்துலட்சுமி

முத்துலட்சுமிக்கு 35 வயதாகிறது.. அருள்ஜோதிக்கு 23 வயதாகிறது.. முத்துலட்சுமியின் கணவருக்கு அருள்ஜோதி, பெரிப்பா மகன் ஆவார்.. அதனால், அண்ணன் வீட்டிற்கு அடிக்கடி அருள்ஜோதி சென்றுவரும்போதுதான், முத்துலட்சுமியுடன் உறவு ஏற்பட்டுள்ளது.. அண்ணி என்பதை அருள்ஜோதி மறந்து, 12 வயது இளையவர் என்பதை முத்துலட்சுமியும் மறந்து அடிக்கடி வீட்டுக்குளேயே உல்லாசமாக இருந்துவந்துள்ளதாக தெரிகிறது.

 மாமரம்

மாமரம்

ஒருகட்டத்தில், இந்த விவகாரம் 2 குடும்பத்தாருக்கும் தெரியவந்துள்ளது.. அதனால் 2 பேரையுமே கண்டித்துள்ளனர்... இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவர்கள் 2 பேருமே மதுரையிலிருந்து, வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டனர்.. எங்கு போனார்கள் என்று தெரியாத நிலையில், இவர்களை உறவினர்கள் தேடியும் வந்தனர்.. இந்நிலையில்தான் சிலவாட்டம் கிராமத்தின் வயல்வெளிக்கு வந்து, மரத்தில் தூக்கு போட்டு தொங்கி உள்ளது தெரியவந்துள்ளது..

 மாயமோ மாயம்

மாயமோ மாயம்

மர்மமான முறையில் இந்த தற்கொலை உள்ளதால், போலீசார் தற்சமயம் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.. தற்போது இது தொடர்பான கூடுதல் தகவல்களும் வெளியாகி உள்ளன.. இந்த கள்ளக்காதல் ஜோடி, கடந்த 4-ந்தேதி மாயமாகி இருப்பதாக அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளதாம்.. அதற்கு முந்திய நாள்தான், இவர்கள் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர்.. மரத்தில் சடலங்கள் தொங்கியநிலையில், அங்கேயே ஒரு பை இருந்துள்ளது..

 ID CARD

ID CARD

அந்த பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் அடையாள அட்டை இருந்தது.. அதைவைத்துதான் இவர்களின் அடையாளம், பெயர், விவரங்களை அறிய முடிந்தது. மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, பன்னிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர்களாம் இவர்கள். அருள்ஜோதிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. முத்துலட்சுமிக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.. கணவருடன் ஒன்றாகத்தான் வாழ்ந்து வந்துள்ளார்..

 சினிமா கம்பெனி

சினிமா கம்பெனி

அருள்ஜோதி சென்னையில் தங்கி, சினிமா துறையில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.. இவர்களின் முறைதவறிய கள்ளக்காதல், குடும்ப உறுப்பினர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.. அதனாலேயே இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாக சொல்கிறார்கள்.. தூக்குப்போட்டு தற்கொலை செய்வதற்காகவும், இந்த கிராமத்தை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிகிறது.. இன்னும் இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது... அம்மாவை காணோம் என்று 3 குழந்தைகளும் அழுது கொண்டிருக்கிறார்களாம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+