"கள்ளக்காதல்".. இரவெல்லாம் அழுத பவானி.. குழந்தையை கூட தூக்கலயாமே.. கடைசியில் இப்படி ஆயிடுச்சே
சென்னை: இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்?
திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்.. 28 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் பவானி.. 24 வயதாகிறது..
அதே பகுதியை சேர்ந்தவர் பவானி.. இவர்களுக்கு திருமணமாகி 4 வருடங்களாகிறது.. ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளது... பிரசாந்த் ஒரகடத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

கணவன்: சில நாட்களாக பிரசாந்த், வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.. முன்பு போல, பெரிதாக பழகாமலும் இருந்து வந்துள்ளார். இதனை கவனித்த பவானி, கவலைக்கு உள்ளானார்.. ஒருவேளை கணவனுக்கு, தொழில்ரீதியாக எதாவது பிரச்சினை இருக்கலாம் என்று நினைத்துள்ளார்.. எனினும் நாள் ஆக ஆக, பிரசாந்தின் நடவடிக்கைகளில் மாற்றம் தென்பட துவங்கின.. ஒருகட்டத்தில், குழந்தையை கூட பிரசாந்த் தூக்காமல் இருந்து வந்துள்ளார்.
அதிர்ச்சி தகவல்: இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாமல், பவானி இதுகுறித்து நேரடியாகவே என்ன ஏதென்று விசாரிக்க ஆரம்பித்தார்.. அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.. தன்னுடன் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண் ஒருவருடன் பிரசாந்த்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.. பிறகு ஒருகட்டத்தில், அந்த பெண்ணுடன் குடும்பமும் நடத்தி வந்திருக்கிறார்..
இதெல்லாம் பவானிக்கு தெரிந்து துடிதுடித்து போய்விட்டார்.. மனைவிக்கு தன்னுடைய கள்ளக்காதல் விஷயம் தெரிந்துவிட்டது என்பதை அறிந்த பிரசாந்த், வீட்டிற்கு வருவதையே சுத்தமாக நிறுத்திவிட்டார்.. ஒரேயடியாக அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.. இதனால் மனமுடைந்த பவானி, வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பவானி தூக்கில் தொங்குவதை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனே அவரை தூக்கில் இருந்து இறக்கி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.. ஆனால், பவானி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.. இதுகுறித்து பவானியின் அம்மா, மணவாள நகர் போலீசில் பிரசாந்த் மீதும் அவரது பெற்றோர் மீதும் புகார் தந்தார்..
கள்ளக்காதல்: அதன் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. யார் அந்த பெண் என்று தெரியவில்லை.. கள்ளக்காதல் குறித்து, கணவனிடம் எந்த தகராறும் பவானி செய்யவில்லையாம்.. தான் பெற்ற பிள்ளையையே தூக்காமல் போனதுடன், கணவன் வீட்டிற்கு வராமல் இருந்ததும்தான் பவானியின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள்..!!












Click it and Unblock the Notifications