காயத்ரியும் ஜூலியும் ஓவியா மீது இவ்வளவு காண்டாக இருக்க காரணம் என்ன தெரியுமா?

காயத்ரியும் ஜூலியும் ஓவியாவை விரட்ட ஒத்தக்காலில் நிற்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காயத்ரியும் ஜூலியும் ஓவியாவை விரட்ட ஒத்தக்காலில் நிற்பதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

சக குடும்பத்தினரால் எவிக்ஷன் செய்யப்பட்டும் மக்களின் வாக்குகளை பெற்று கடந்த 2 வாரங்களாக பிக்பாஸ் வீட்டிலேயே நீடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் ஓவியா. இதனை காயத்ரி, ஜூலி மற்றும் நமீதா உள்ளிட்டோரால் ஜீரணித்துக்கொள்ள முடியாவில்லை.

இப்படியே போனால் ஓவியாதான் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருப்பார் என்ற பயம் வந்துவிட்டது. இதனால் ஓவியாவை குறிவைத்து வார்த்தைகளால் விஷத்தை கக்கி வரும் ஜூலியும் காயத்ரியும் அவரை விரட்ட திட்டமிட்டு இனிதே அரங்கேற்றி வருகின்றனர்.

ஓவியாவை புகழ்ந்த தலைவாஸ்

ஓவியாவை புகழ்ந்த தலைவாஸ்

இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தமிழ் தலைவாஸ் குடும்பத்தினரிடம் காயத்ரி நிகழ்ச்சியை பற்றி எப்படி பேசிக்கொள்கிறார்கள் என கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்திருந்த விருந்தினர்கள் ஓவியாவை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இதன் புரமோவை வெளியிடப்பட்டது.

ஜூலியின் நாடகம்

ஜூலியின் நாடகம்

இதனால் அதிர்ச்சியடைந்த ஜூலி தான் பெரியளவில் பேசப்பட வேண்டும் என்பதற்காக வயிற்றுவலி நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதையே காரணமாக வைத்து மற்றவர்களுக்கும் செக் வைக்க திட்டமிட்டாராம் ஜூலி.

காயத்ரியின் டார்கெட் ஓவியா

காயத்ரியின் டார்கெட் ஓவியா

ஆனால் காயத்ரி ஓவியாவை டார்கெட் செய்ய நல்லவர் போல் நடித்த ஜூலி எப்படியாவது ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் சேர்த்து ஓவியாவுக்கு எதிராக திசை திருப்பி விட்டுள்ளார்.

ஜூலியின் முகத்திரை

ஜூலியின் முகத்திரை

ஏற்கனவே காயத்ரியின் இரட்டை வேடத்தை குறும்படம் மூலமாக தோலுரித்தார் நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன். இந்நிலையில் ஜூலியின் முகத்திரையையும் கிழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+