மகாமகம்: புனித நீராட ஜெ. கும்பகோணம் வராதது ஏன்?- சென்டிமெண்ட் காரணம்?
சென்னை: தென்னகத்தின் கும்பமேளா என்று பெருமையுடன் அழைக்கப்படும் மகாமகம் தீர்த்தவாரி பெருவிழா எந்த வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி நடந்து முடிந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் நிம்மதியாக நீராடி முடித்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா நீராட வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விபத்து, உயிர்பலிகள், தோல்வி சென்டிமெண்ட் காரணமாகவே கும்பகோணம் செல்வதை தவிர்த்து விட்டார் என்று கூறப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பகோணம் மகாமக திருவிழாவின் தீர்த்தவாரி நிகழ்ச்சி திங்கட்கிழமையன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
மனித வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வேறு போலீசாரின் தூக்கத்தை கெடுக்கவே கண்காணிப்புகள் கூடுதலாக இருந்தது. 100 கேமராக்கள் குளத்தைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணிக்காக 27 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி, கூடுதலாக ரயில்வே காவல்துறையினர் 5,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
குளக்கரையில் தீயணைப்பு வீரர்கள் 1,300 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள், பைக் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையிலேயே இருந்தன. மகாமகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்குக் குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் பல கிலோமீட்டர்கள் நடக்க விட்டுவிட்டனர் என்றும், உணவு, குடிநீர் வசதிகள் சரியாக செய்யப்பட வில்லை என்றும் பக்தர்கள் குறைபட்டுக்கொண்டனர்.

ஜெ. பிறந்த நட்சத்திரம்
முதல்வர் ஜெயலலிதா மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். முதன்முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற போது 1992ம் ஆண்டு நடந்த மகாமகம் திருவிழாவில் பங்கேற்க தனது தோழி சசிகலா உடன் கும்பகோணம் சென்றிருந்தார் ஜெயலலிதா.

அந்த சோக சம்பவம்
மகாமக தினத்தன்று அதாவது பிப்ரவரி 26ம் தேதி காலையில் பக்தர்கள் புனித நீராடலுக்குத் தயாராக குவியத் தொடங்கினர். காலையில் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் 10 மணி போல கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த சமயத்தில்தான் ஜெயலலிதா குளிப்பதற்காக வரவிருந்தார். இதனால் குளிக்க வந்த பக்தர்கள் ஜெயலலிதாவைப் பார்க்கும் ஆவலில் கலையாமல் நின்று விட்டனர். இதனால் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது.

புனித நீராடல்
ஜெயலலிதாவும், சசிகலாவும் தனியாக அமைக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து புனித நீரை தங்கம் மற்றும் வெள்ளிக்குடத்தில் எடுத்து ஒருவருக்கொருவர் எடுத்து ஊற்றி நீராடினர். அந்த சமயம், பாங்கூர் தர்மசாலா கட்டடத்தின் வெளிப்புறம் இருந்த கிரில் வைத்த கட்டைச் சுவர் மீது பலர் ஏறி ஜெயலலிதாவைப் பார்க்க முயன்றனர். அதில் இரும்பு கிரில் சுவரோடு சாய்ந்தது அங்கேயே சிலர் நசுங்கி இறந்தனர்.

குளத்தினுள் குவிந்த கூட்டம்
குளத்திற்குள் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குளத்தினுள் இருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் திணறியது ஒரு பக்கம் இருக்க தடியடியும் நடத்தினர். இதனால் கூட்டத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. பக்தர்கள் அங்குமிங்கும் ஓடியதில் கூட்ட நெரிசலில் பலர் குளத்திலேயே சிக்கி பலியானார்கள்.

நீராடுவதில் கவனம்
இவ்வளவு நடந்தும் கூட முதல்வரும், சசிகலாவும் நீராடுவதிலேயே கவனமாக இருந்தனர். பின்னர் அவர்களைப் பாதுகாப்புடன் போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

60 பொதுமக்கள் பலி
இந்த கோரச் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர். கும்பகோணத்தில் பல காலமாக மகாமகம் தீர்த்தவாரி திருவிழா நடந்து வருகிறது. ஆனால் 1992க்கு முன்புவரை இப்படிப்பட்ட விபத்து நடந்ததில்லை.

1996ல் தோல்வி
மகாமகம் சோகம் 1996ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எதிர்கட்சியினரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதோடு ஊழல், சொத்துக்குவிப்பு, வளர்ப்பு மகன் திருமணமும் இணைந்து கொள்ள படுதோல்வியை சந்தித்தார் ஜெயலலிதா.

2004ல் நடந்த மகாமகம்
1992 சோகம் போல எதுவும் நடந்து விடக்கூடாது என்று 2004ம் ஆண்டு நடந்த மகாமகம் தீர்த்தவாரியில் பங்கேற்க அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா கும்பகோணம் போகவில்லை. ஒரே நாளில் இருந்த மகாமகக் குளியலை, கொடியேற்றத்தில் இருந்து 10 நாட்கள் வரை குளிக்கலாம் என்று மாற்றி அமைத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.

தீ விபத்தில் பலி
மகாமகம் தீர்த்தவாரியில் எந்த வித அசம்பாவித சம்பவம் நடைபெறவில்லை என்றாலும் கும்பகோணத்தில் 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டு 100 குழந்தைகள் உயிரிழந்தனர். மகாமகம் நடைபெற்று 4 மாதத்தில் நடந்த இந்த தீ விபத்து குறித்து எதிர்கட்சியினர் கடும் விமர்சனம் செய்தனர்.

2006 தேர்தலில் தோல்வி
அடுத்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு எதிராக பெரிய அலை எதுவும் வீசவில்லை என்றாலும் தோல்வியை தழுவினார் ஜெயலலிதா.

மூன்றாவது முறையாக முதல்வர்
ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றுள்ள இப்போதும் மூன்றாவது முறையாக மகாமகம் தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. 250கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கும் தேவையான பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த 10 நாட்களாகவே பக்தர்கள் நீராடினர்.

பச்சைக்கொடி காட்டிய காமராஜ்
திங்கட்கிழமையன்று மகாமகம் தீர்த்தவாரி நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டு பச்சைக்கொடி அசைத்து மகாமகத்தைத் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு முறையும் சங்கராச்சாரியார் வந்து மகாமகத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஆலோசனைகளையும் வழங்குவார். இந்த முறை அவருக்கு அழைப்பிதழ்கூட அ.தி.மு.க அரசு சார்பில் வழங்கப்படவில்லை. ஆனாலும், அவர் வந்துவிட்டுப்போனார்.

பலத்த பாதுகாப்பு
10 நாட்களுக்கு மேலாக காவல் துறையினர் கும்பகோணத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மனித வெடிகுண்டு மர்ம கடிதத்தை அடுத்து மோப்ப நாய் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பரிசோதித்தனர். இரண்டு இடங்களில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது. தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. சசிகலா வரலாம் அல்லது ராஜ்நாத் சிங் வரலாம் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் அப்படி யாரும் வரவில்லை.

சென்டிமெண்ட் பயம்
இந்த ஆண்டு மகாமகம் குளத்தில் நீராட ஜெயலலிதா வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் முதல்வர் ஜெயலலிதா நீராட வரவில்லை. இதற்கு பதிலாக மகாமகம் தீர்த்த பிரசாரம் போயஸ்கார்டனுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

பிறந்த நாள் கொண்டாட்டம்
மகாமகம் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது என்ற நிம்மதி ஒரு புறம் இருக்க, ஜெயலலிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆர்பாட்டமாக நடந்துள்ளது. ஆண்டுதோறும் மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வரும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகம் நட்சத்திரத்தில், மகாமகம் வருகிறது. அந்த வகையில், இந்த முறை மகாமகம் தினத்தை அ.தி.மு.கவினர் ஜெயலலிதாவின் பிறந்த நாளாகவே, வெகுவிமரிசையாகக் கொண்டாடி முடித்தனர்.

6 சென்டிமெண்ட்
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 1992, 2004ம் ஆண்டுகளில் மகாமகம் திருவிழா நடைபெற்றது. இதனையடுத்து 1996, 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்தது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications