சென்னையில் வாக்குப் பதிவு குறைந்தது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் சென்னையில் மட்டும் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது.

இதனைக் கண்டித்து பலரும் சமூக வலைத் தளங்களில் கொந்தளித்துக் கொண்டுள்ளனர்.

Why low polling in Chennai?

உண்மையில் சென்னையில் வாக்குப் பதிவு அப்படி ஒன்றும் மோசமில்லை என்றே சொல்ல வேண்டும். வாக்குரிமை இருந்த சென்னைவாசிகள் பெரும்பாலும் வாக்களித்துவிட்டனர்.

பிழைப்புக்காக சென்னை வந்து குடியேறியவர்கள்தான் இன்றைய சென்னைவாசிகளில் பாதிப் பேர். இவர்களுக்கு சென்னையில் வாக்குரிமை இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கோடை விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். ஓட்டுப் போடுவதற்காக சென்னைக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை.

இன்னொரு முக்கியமான விஷயம், சென்னையில் குடியேறிய பெரும்பாலான மக்கள் இரட்டை வாக்குரிமையை வைத்திருக்கிறார்கள். இதனை தேர்தல் ஆணையமும் இதுவரை சரிபண்ணவில்லை. இவர்களுக்கு சென்னையில் ஒரு வாக்குரிமை, சொந்த ஊரிலும் வாக்குரிமை. எனவே தம் சொந்த ஊரிலேயே போட்டுக் கொள்ளலாம் என அங்கேயே இருந்துவிட்டார்கள்.

தேர்தல் நேரத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சென்னைவாசிகள் அடையாறு, கூவம் கரையோரங்களில் வாழ்ந்தவர்கள். இவர்கள் மொத்தமாக சென்னைக்கு வெளியே குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் கணிசமாக வாக்குகளும் இந்தத் தேர்தலில் மிஸ்ஸிங்.

வழக்கம்போல, 'சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாள் லீவு. இதைப் போய் மிஸ் பண்ணலாமா.. கிளம்புடா டூருக்கு' என்ற மன நிலையில் குதூகலமாக சுற்றுலா போன நடுத்தர வர்க்கமும் இந்த குறைந்த வாக்குப் பதிவுக்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+