தூத்துக்குடியில் இறந்தவர்களின் குடும்பம் மீது திடீர் அக்கறை ஏன்? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கொட்டு

தூத்துக்குடியில் இறந்தவர்களின் குடும்பத்தின் மீது தமிழக அரசு திடீர் என்று அக்கறை கொள்வது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்!

    சென்னை: தூத்துக்குடியில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் பதப்படுத்தியே ஆக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தின் மீது தமிழக அரசு திடீர் என்று அக்கறை கொள்வது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    தூத்துக்குடியில் தமிழக போலீஸ் நடத்திய கொடூரமான துப்பாக்கி சூடு காரணமாக 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்னும் பலர் உயிருக்கு போராடியபடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

     Why sudden concern towards Sterlite shooting victims family?, asks HC to TN Gov

    இதில் விசாரணை முடிந்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடாது, அவர்களின் உடல்களை பதப்படுத்தும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பதப்படுத்த முடியாது என்று தமிழக அரசு மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே முறையீடு செய்து இருந்தது.உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தமிழக அரசு தன்னுடைய மனுவில் விளக்கம் கேட்டு இருந்தது. மேலும் கூடுதலாக முக்கியமான கடிதம் ஒன்றையும் சமர்ப்பித்தது.

    அதில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு உடல்களை கொடுக்க வேண்டும் என்று உறவினர்களுக்கு ஆதரவாக பேசுவது போல தமிழக அரசு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தது.

    தற்போது தமிழக அரசின் இந்த வாதத்திற்கு உயர்நீதிமன்றம் கொட்டு வைத்துள்ளது. உயிரிழந்தவர்கள் உடல் மீது உங்களுக்கு ஏன் அக்கறை? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    உயிரிழந்தவர்கள் உடல்களை உறவினர்களே கேட்காத நிலையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது ஏன். உயிரிழந்தவர்களின் மீது தமிழக அரசுக்கு ஏன் இவ்வளவு அக்கறை. உடலை பதப்படுத்திய ஆக வேண்டும். உடலை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+