மாமனாருடன் சேர்ந்து கணவரைக் கொன்று வீட்டு முன் புதைத்த பெண் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாமனாருடன் சேர்ந்து கணவரைக் கொன்றார் ஒரு பெண். பின்னர் பிணத்தை வீட்டின் முன்பே புதைத்து விட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி கும்மனூரை
சேர்ந்தவர் தேவன். 58 வயதான இவரது மகன் கேசவன். இவருக்கு 35 வயது. கேசவனின் மனைவி பெயர் சங்கீதா. 31 வயதான இவருக்கும், கேசவனுக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கேசவனைக் காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் கொடுத்தார் தேவன். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சங்கீதா தனது தாய் வீட்டுக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில் கேசவன் வீட்டின் முன்பு சத்தம் போட்டுக் குரைத்தபடி சில நாய்கள் மண்ணைப் போட்டுத் தோண்டியுள்ளன. மேலும் துர்நாற்றமும் வந்துள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வருவதாக தெரியவில்லை. இதையடுத்து மக்களே தோண்ட ஆரம்பித்தனர். அப்போது அங்கு ஒரு பிணம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
மீண்டும் போலீஸாருக்குத் தகவல் போனது. இதையடுத்து போலீஸார் வந்தனர். சங்கீதாவை அழைத்து விசாரித்தனர். அவர் உண்மையைக் கக்கினார். அதாவது பிணமாகக் கிடந்தது கேசவன்தான். அவரைக் கொன்றது சங்கீதா. இதற்கு மாமனார் தேவன் உடந்தை.
இதுகுறித்து சங்கீதா கூறுகையில், தினமும் குடித்து விட்டு தன்னை கணவர் அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் மாமனாருடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்று வீட்டின் முன்புறம் புதைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சங்கீதாவை போலீஸார் கைது செய்துள்ளனர். இன்னும் தேவன் கைது செய்யப்படவில்லை. கொலைக்கான காரணமாக சங்கீதா ஒன்றைக் கூறினாலும் கூட வேறு காரணம் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதனால் சங்கீதாவையும், தேவனையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications