குடும்பம் நடத்த வர மறுக்கிறார்.. மனைவி கொடுத்த புகாரில் கணவர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் குடும்பம் நடத்த கணவர் வர மறுத்ததால் மனைவி போலீசில் புகார் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சேத்துப்பட்டு புல்லாபுரத்தை சேர்ந்தவர் சின்னா கார் மெக்கானிக். இவரது மனைவி உஷா. இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். 8 மாத குழந்தை உள்ளது.
திருமணத்துக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக உஷா தனது தாய் வீட்டில் இருந்தார். அத்தோடு நில்லாமல், தனிக்குடித்தனம் நடத்தலாம் வாருங்கள் என்றும் கணவரை அழைத்தார். ஆனால் அவரோ வர மறுத்து வந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து உஷா வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சின்னாவை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications