கோவிலுக்குள் வந்து விட்டேன், வெளியே போகவே மாட்டேன், இது சத்தியம்... கார்த்திக்!!
சென்னை: இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காங்கிரஸ் கட்சியில் இணைவது பெருமை அளிப்பதாகவும், நிச்சயமாக இதிலிருந்து வெளியேற மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக்.
சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த கார்த்திக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் கூறியதாவது :-
அரசியலில் நிரந்தர எதிரி
காங்கிரஸ் தலைவராக தேந்தெடுக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள். அரசியலில் நிரந்தர எதிரி என்று யாரும் இல்லை. நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தந்த காங்கிரஸ் கட்சியுடன் இணைவதில் பெருமை அடைகிறேன்.
இறைவன் கட்டளை...
இனி வரும் காலங்களில் நாம் வெற்றி பெறுவோம். இது சத்தியம். இது இறைவன் கட்டளை. இந்தியா வளமாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும்.

பாம் வெடிக்குது...
இன்றைக்கு சொல்லிக்கொள்ளலாம் அது பண்ணப்போறோம். இது பண்ணப் போறோம். இந்தியா வளர்ச்சியை நோக்கி போகிறது என்று. எங்கேயா போகுது. அங்கெங்கே பாம் தான் வெடிக்குது.
தமிழக மீனவர்களுக்குத் தூக்கா...?
நம் அன்பு சகோதரர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்கும் அளவுக்கு போயிருக்கிறார்கள். ஒரு பாம் போட்டா தாங்காது கொழும்பு. அது ஒரு நாடா.
இந்தியா கோழை நாடு அல்ல...
சீனாவுடன், பாகிஸ்தானுடன் இருந்தால் இருந்துகொண்டு போங்கள். இந்தியா கோழை நாடு அல்ல. எங்களுடைய மக்களை நீ கொல்ல முடியாது. நாங்கள் விடமாட்டோம்.

காங்கிரஸ் எனும் கோவில்...
நான் என்றைக்கு இந்த கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தேனே அன்றைக்கே முடிவு பண்ணிட்டேன், இதிலிருந்து வெளியே போகக்கூடாது என்று.
சத்தியம்...
அற்புதமாக அன்போடு இந்த வீடு வரவேற்றது. இந்த குடும்பத்தோடு இணைந்த இந்த திருமணம் விவாகரத்து ஆகவே ஆகாது. இது சத்தியம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications