காவிரி விவசாயிகளுக்காக ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஓரணியில் போராடுவார்களா?
Recommended Video

சென்னை: காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும், கர்நாடக அரசு அச்சப்படுவதும் இல்லை, அசரப்போவதும் இல்லை.. ஏனென்றால் எல்லாக்கட்சியினரும் ஒரே அணியில் திரண்டு, எதிர்ப்பு தெரிவிப்பதுதான் முக்கிய காரணம். ஆனால், தமிழக அரசியல்களத்தில் எல்லா தருணங்களிலும் அப்படி நடப்பதில்லை.
ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை காவிரிவிவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை திட்டித்தீர்த்தார். தனிப்பட்ட முறையில் கருணாநிதியின் குடும்பம் குறித்தும் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல், திமுக கட்சித்தலைவரும், அதிமுகவின் கட்சித்தலைமையை காட்டமாக வசைபாடியுள்ளார். ஆனால், இந்த போக்கு இனியும் தொடரக்கூடாது என்பதுதான் இப்போது களத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் எண்ணமாக இருக்கிறது.

கட்சிகளின் ஒற்றுமையை, நீதிமன்ற தீர்ப்பை எதுவும் செய்யமுடியாது என்பதை பல சமயங்களில் கர்நாடாகவில் கண்டுள்ளோம். ஆனால், தமிழகத்தில் அப்படி ஒன்று நடக்கவில்லை. தற்போது கிடைத்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்பதை கர்நாடகா எதிர்க்கிறது. ஆனால், தமிழகத்தில் அதற்கு வலுவான எதிர்ப்பு காட்டவில்லையோ என்று தோன்றுகிறது.
காவிரி விவகாரம் தொடர்பாக, அனைத்துகட்சிக்கூட்டம் நடத்தப்போவதாக திமுக அறிவித்தது, பிறகு அரசு முறைப்படி அறிவித்தது. இதையடுத்து திமுக செயல் தலைவர் தனது முடிவை கைவிட்டு, அரசு நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஒற்றுமை போக்கு பலராலும் வரவேற்கப்படுகிறது.
ஆனால், தற்போது தமிழக அனைத்துக்கட்சி உறுப்பினர்களை சந்திக்க பிரதமர் மறுத்துள்ளது போராட்டங்களை இன்னும் வலுப்படுத்தும் என்றே சொல்லப்படுகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் ஒரே அணியில் களத்தில் நின்று போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய தருணம் என்று விவசாயிகள் சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சட்ட ரீதியாக தமிழகத்திற்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், அடுத்தது என்ன செய்யலாம் என சட்ட நிபுணர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்திவருகிறார். ஒருபக்கம் ஒற்றுமையான போராட்டம், மறுபக்கம் சட்டரீதியான போராட்டம் இரண்டு தமிழகத்திற்கு நீதி தேடித்தரும்.












Click it and Unblock the Notifications